"தங்க இடம் இல்லாம யாரும் கஷ்டப்பட கூடாது".. சாலையில் வசிப்பவர்களுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுக்கும் நகரம்.. சட்டமே போட்ருக்காங்களாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தங்க வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசித்துவரும் மக்களுக்கு பண உதவி செய்ய முன்வந்திருக்கிறது நகர நிர்வாகம் ஒன்று. இது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தங்க இடம் இல்லாம யாரும் கஷ்டப்பட கூடாது".. சாலையில் வசிப்பவர்களுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுக்கும் நகரம்.. சட்டமே போட்ருக்காங்களாம்..!

Also Read | மரம் நடலாம்னு குழி தோண்ட போனவருக்கு காத்திருந்த ஷாக்.. போட்டோவை இணையத்துல ஷேர் பண்ணப்போ தான் உண்மையே தெரியவந்திருக்கு..!

அமெரிக்காவில் உள்ளது டென்வர் மாகாணம். இங்கே உள்ள கவுன்சில் சமீபத்தில் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்தது. மக்களுக்கு அடிப்படை ஊதியம் கிடைக்க வழிவகை செய்யும் இந்த திட்டத்தின்மூலமாக வீடு இல்லாமல் பொது இடங்களில் வசித்துவரும் மக்களுக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 9.5 லட்ச ரூபாய்) வழங்க தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆண்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் என மொத்தம் 140 பேருக்கு முதல்கட்டமாக இந்த தொகை அளிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வீடு இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நிலையை அடைய திட்டமிட்டிருப்பதாக உள்ளூர் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

A city is planning to give hundreds of homeless people Rs 9.5 lakh

அடிப்படை வருமானம்

இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பயனாளர்களுக்கு 1000 டாலர்கள் என ஓராண்டு வரையில் இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாகாண மேயர் மைக்கேல் பி. ஹான்காக்,"வீடு மற்றும் தங்குமிடம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்றது அடிப்படை வருமானம். அதனை பூர்த்தி செய்யவே இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். இந்த நேரடி பண உதவியானது, பெண்கள் உள்ளிட்ட 140 பேர் தங்களுக்கான நிலையான வீட்டை அடைய முடியும். விரைவில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.

2 மில்லியன் டாலர்

அமெரிக்க மீட்பு சட்டத்தின் படி இந்த  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்திருக்கிறார். வீடு இல்லாதவர்களுக்கு தனியாக தங்கும் இடங்கள் விரைவில் அமைக்கப்படும் எனவும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டென்வர் அடிப்படை வருமானத் திட்டத்தின் நிறுவனர் மார்க் டோனவன் இந்த திட்டம் முதல்முறையாக டென்வரில் துவங்கப்படுவதாகவும், மிகவும் வறுமையில் வாடும் மக்களை கைதூக்கி விடவும், வீடற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த திட்டம் உதவும் என்றார்.

A city is planning to give hundreds of homeless people Rs 9.5 lakh eac

அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் வீடின்றி சிரமப்படும் மக்களுக்கு மாகாண அரசு மாதந்தோறும் 1000 டாலர்களை அளிக்க முடிவெடுத்திருப்பது பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | இன்ஸ்டாகிராமில் இருந்த பிழை.. சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு கிடைச்ச தாறுமாறான பரிசுத்தொகை..!

CITY, HOMELESS PEOPLE, PLANNING

மற்ற செய்திகள்