"விமானத்துல போகணும்னு ரொம்ப நாள் ஆசை.. ஆனா முடியல".. வீட்டையே விமானம் மாதிரி கட்டிய தொழிலாளி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கம்போடியா நாட்டில் கட்டிட தொழிலாளி ஒருவர் விமானம் போலவே தனது வீட்டை கட்டி இருக்கிறார். இதனை அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து வரும் நிலையில் பலரும் அவருடைய இந்த வித்தியாச முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"விமானத்துல போகணும்னு ரொம்ப நாள் ஆசை.. ஆனா முடியல".. வீட்டையே விமானம் மாதிரி கட்டிய தொழிலாளி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | வீட்ல கோல்டன் Fish வளர்த்தது ஒரு குத்தமா?.. ஹவுஸ் ஓனரின் ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ்.. குழம்பிப்போன பெண்..!

பொதுவாக ஒவ்வொருவருக்குமே சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அதுவும் நமக்கு பிடித்தார் போல் வடிவமைப்புடன் கட்ட வேண்டும் என விருப்பப்படுவோம். வீட்டில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய பொருட்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்த நினைப்பதும் உண்டு. அந்த வகையில் கம்போடியா நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் தன்னுடைய பல வருட கால ஆசையை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

கம்போடியா நாட்டைச் சேர்ந்த க்ராச் போவ் எனும் நபர் விமானம் போலவே தனது வீட்டை கட்டி இருக்கிறார். தரையில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த விமான வீடு அமைந்திருக்கிறது. இந்த வீட்டிற்குள் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் கழிவறை இருக்கிறதாம். விமானத்தில் இருப்பது போல என்ஜின், இறக்கைகள் ஆகியவற்றை கான்கிரிட்டால் செய்திருக்கிறார் போவ். 43 வயதான போவ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

A Cambodian man build house exactly looks like Plane

Images are subject to © copyright to their respective owners.

சிறுவயதில் இருந்தே தனக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் ஆனால் இதுவரையில் தான் விமானத்தில் சென்றதில்லை என தெரிவிக்கும் அவர் எப்போதாவது நகரத்திற்கு செல்லும் போது விமானம் திரையரங்குவதை ஆவலுடன் பார்ப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த வீடு குறித்து பேசியுள்ள அவர், "என்னுடைய கனவு நிஜமாவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் 100% இந்த வீட்டின் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. இந்த வீட்டிற்காக 20000 அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளேன். இந்த பணத்தை நான் கடந்த 30 வருடங்களாக சேமித்து வந்தேன்" எனச் சொல்லி இருக்கிறார்.

A Cambodian man build house exactly looks like Plane

Images are subject to © copyright to their respective owners.

இந்த விமான வீட்டை பார்க்க பல சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் இந்த இடத்திற்கு வருகின்றனர். தற்போது தனது வீட்டிற்கு அருகில் காபி ஷாப் ஒன்றை போவ் திறந்து இருக்கிறார். இதன் மூலம் தனக்கு வருமானம் வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த விமான வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

Also Read | "இதோட தான் பொழுது விடிஞ்சது.. யாரு பார்த்த வேலை இது?".. கலாய்த்த அஷ்வின்.. என்ன ஆச்சு?

CAMBODIAN, MAN, BUILD, HOUSE, PLANE

மற்ற செய்திகள்