அரசன் போல வாழ்க்கை.. 9 வயசுலையே கெத்து காட்டுறாரு.. உலகமே வியந்து பார்க்கும் நைஜீரிய சிறுவன்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நைஜீரியா: நைஜீரியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் இளைய கோடிஸ்வரர் என்ற புகழை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறார்.

அரசன் போல வாழ்க்கை.. 9 வயசுலையே கெத்து காட்டுறாரு.. உலகமே வியந்து பார்க்கும் நைஜீரிய சிறுவன்

ப்ளீஸ், இறந்து போக அனுமதி கொடுங்க.. கேரள அரசிடம் விண்ணப்பித்த திருநங்கை.. இப்படி இருந்தா நான் வேற என்னங்க பண்றது?

இந்த உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், வசதியான, சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு உள்ளது. அதற்காகவே உலகின் சின்ன பிரமிப்புகளை உதாசீனம் செய்து செல்வத்தை தேடி ஓடுகிறது.

இளம் பணக்காரர்:

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பணக்காரர்கள் ஆகும் நபர்களை குறித்த செய்தி அதிகமாக வந்த நிலையில், இளம் வயது சிறுவன் ஒருவர் செல்வ செழிப்போடு பணக்கார வாழ்வு வாழ்ந்து வருகிறார். நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது முகமது அவல் முஸ்தபா எனும் சிறுவன் ஆடம்பர மாளிகை, தனி ஜெட் விமானம் என கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட்ங்கில் உள்ளது.

தனியாக ஜெட் விமானம்:

அந்த சிறுவனுக்கு என தனியே பல மாளிகைகள், தனி ஜெட் விமானம், விலை உயர்ந்த சொகுசு சூப்பர் கார்கள் என பல உள்ளது. இன்புளுயன்சர் என்று கூறப்படும் முகமது அவல் முஸ்தபா உலகின் 'இளைய கோடீஸ்வரர்' என்ற புகழை அடைந்துள்ளார்.

யார் இந்த சிறுவன்:

A boy from Nigeria is known as a young millionaire

இந்த சிறுவன் யார் என தேடிபார்க்கையில் தான், நைஜீரியாவில் Mompha என்று பிரபலமாக அறியப்படும் இணைய பிரபலம் இஸ்மாலியா முஸ்தபாவின் மகன் தான் இந்த முகமது அவல் முஸ்தபா என தெரியவந்துள்ளது. இவர் Mompha Junior எனவும் அழைக்கப்படுகிறார்.

ஆடம்பரமான வாழ்க்கை:

இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெறும் 9 பதிவுகளுடன்  25,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். பொதுவாக மொம்பா ஜூனியர் வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டுவார்.

தற்போது அவரின் தனிப்பட்ட ஜெட் விமானத்தின் படத்தைப் பகிர்ந்து கொண்டது தான் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் Mompha Junior தனது இன்ஸ்டாவில், 'ஒருபோதும் எந்தவொரு நைஜீரிய நபரையும் குறைத்து பார்க்காதீர்கள், உண்மையான ஹஸ்ட்லர்கள் உடைந்து போக மாட்டார்கள், உடைந்து விடாதீர்கள். ஹஸ்ட்லர்கள் சம்பிரதாயங்களிலிருந்து வேறுபட்டவர்கள் கடவுள் ஆசீர்வதிப்பாராக' என பதிவிட்டுள்ளார்.

மர்ம விலங்கின் காலடி தடம்.. அதிகாலையில் இறந்து கிடந்த ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த ஊர்மக்கள்

BOY, NIGERIA, YOUNG MILLIONAIRE, நைஜீரியா, சிறுவன், இளம் பணக்காரர்

மற்ற செய்திகள்