Valimai BNS

சுத்தி கஸ்டமர்ஸ் இருந்தப்போ.. உங்க கணவர் என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? கண்டுக்கொள்ளாத மனைவி.. இங்கிலாந்து பெண்ணிற்கு கிடைத்த நியாயம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து: இங்கிலாந்தில் வாடிக்கையாளரின் முன் மாதவிடாயை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாக்கிய முதலாளியின் மீது பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

சுத்தி கஸ்டமர்ஸ் இருந்தப்போ.. உங்க கணவர் என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? கண்டுக்கொள்ளாத மனைவி.. இங்கிலாந்து பெண்ணிற்கு கிடைத்த நியாயம்

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா என்ற செல்லப் பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் லீ பெஸ்ட். 54 வயதாகும் இவர் திருமணமானவர் ஆவார்.

வாடிக்கையாளர்கள் முன் கத்தி கூச்சல்:

ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் உடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது "உனக்கு இந்நேரம் மாதவிடாய் முடிந்திருக்கவேண்டும்" என்று வாடிக்கையாளர்கள் முன் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

காதுகளை மூடிக் கொண்டார்:

இப்படி நடந்துக் கொண்டது லீ பேஸ்டுக்கு ஒருதுளி கூட பிடிக்கவில்லை. அதை கேட்க மனமில்லாமல் அவர் தன்னுடைய கைகளால் காதுகளை மூடிக்கொண்டுள்ளார். ஆயினும், பிளெட்சர் விடாமல் அவரை திட்டியும் கொச்சையாகவும் பேசியுள்ளார்.

பணியில் இருந்து நீக்கம்:

இந்த சம்பவம் லீ பேஸ்டுக்கு பெரும் மன உளைச்சலையும், வருத்தத்தையும் உண்டாக்கியது. இது பற்றி பெஸ்ட் தனது முதலாளியின் மனைவியும் கூட்டாளியுமான ஆண்ட்ரியாவிடம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, தேவையில்லாமல் இப்படி புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு மாதம் கழித்து லீ பெஸ்ட் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர், தனது முதலாளியின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இழப்பீடு:

பெண்ணை அவரது வயது மற்றும் பாலின பாகுபாடு மற்றும் நியாயமற்ற பணிநீக்கம் செய்த குற்றத்திற்காக பிளெட்சர், பாதிக்கப்பட்ட லீ பேஸ்டுக்கு 20,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து லீ பெஸ்ட் தற்போது RawKings என்ற பெயரில் சொந்தமாக பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையை ஆரம்பித்துள்ளார்.

MENSTRUAL PERIOD, UK, BOSS, மாதவிடாய், இங்கிலாந்து, முதலாளி

மற்ற செய்திகள்