உலகையே உலுக்கிய இளைஞரின் புகைப்படம்.. நடுக்கடலில் ஒரு லைஃப் ஆஃப் பை - வாழ்க்கை முழுக்க சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: லைஃப் ஆஃப் பை படத்தில் தோன்றுவது போன்று நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அமர்ந்து வந்த சம்பவம்  உலகம் முழுவதும் அனைவரது மனதை உலுக்கியுள்ளது.

உலகையே உலுக்கிய இளைஞரின் புகைப்படம்.. நடுக்கடலில் ஒரு லைஃப் ஆஃப் பை - வாழ்க்கை முழுக்க சோகம்!

கொலம்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா (22). அவரது பயணம் பலருக்கும் படம் பார்ப்பதை போன்று தோன்றாலும். அனைத்தும் உண்மையே. நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகின் மேல் அமர்ந்து பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார் ஜூவான்.  கடந்த 25ம் தேதி அமெரிக்க கடற்படையால் மீட்கப்பட்டேபாது அவரது  உடலில் இருந்த நீர்ச்சத்து குறைந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். பின்னர்,  ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்தனர்.

a 22-year-old man who Story Of picture in Florida

நடந்தது என்ன?

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸிலிருந்து ஜன.23ம் தேதி (ஞாயிறு) அதிகாலை ஜுவான் உட்பட 40 பேர் அமெரிக்காவுக்கு கடல்வழியாக பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், படகில் பயணித்த 40 பேரில்   ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா மட்டுமே மீண்டு வந்துள்ளார். படகில் பயணித்தவர்கள் எவரும் கவசம் அணியாதது சோகத்தை தருகிறது. இந்த விபத்தில் ஜுவானின் தங்கை உட்பட அனைவரும் கடலில் மாயமாகினர்.

எந்த நாட்டுக்கு போனாலும் மறக்காம ‘Toilet-டை’ எடுத்துச் செல்லும் வட கொரிய அதிபர்?.. இதை தொட்டா அவ்ளோதான்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!

a 22-year-old man who Story Of picture in Florida

விபத்து

அதாவது, மோசமான வானிலை காரணமாக படகு விபத்துக்குள்ளாகிருப்பதும், இதுவரை 5 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஆள்கடத்தல் கும்பல் இந்தப் படகில் பயணித்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடற்படை சந்தேகிக்கிறது.

அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல் தண்டனை.... காதலிக்காக 25 வயதில் செய்த தவறு... இனி இவரை காப்பாத்த முடியாது!

புலம்பெயர் மக்கள்

அமெரிக்கா சென்றுவிட்டால் தற்போதுள்ள வறுமை கொஞ்சம் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் தென் அமெரிக்க நாட்டினரும், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களும் கடல் வழியாக சட்டத்துக்கு புறம்பாக பயணம் செய்கின்றனர். ஆனால், இவ்வாறான பயணத்தின்போது  கடல் விபத்துக்குள்ளாகி மக்கள் உயிரிழக்கும் நிலை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

a 22-year-old man who Story Of picture in Florida

புலம்பெயர் மக்கள் வாழ்க்கையை தேடி நாடோடி போல் ஒரு இடத்திற்கு செல்கின்றனர். இடம் பெயர் முகவரி மறந்து வாழும் அவலம் நீடிக்கிறது.

அந்த வரிசையில்,  ஜூவானின் இந்தப் புகைப்படம் அவர்களின் வலியை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை காணும்போது லைஃப் ஆஃப் பை படத்தில் வரும் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன.

22-YEAR-OLD MAN, STORY OF PICTURE IN FLORIDA, MEDITERRANEAN IN FLORIDA, அமெரிக்கா, லைஃப் ஆஃப் பை

மற்ற செய்திகள்