'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...!' "சோ வாட்..." எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் ஒருவர் முழுவதும் குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...!' "சோ வாட்..." எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதித்த 100 வயது முதியவர் ஒருவர், முழுவதும் குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆன நிகழ்வு நடந்தேறியுள்ளது. இதுகுறித்த செய்தியை சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா வெளியிட்டுள்ளது.

கடந்த ஃபிப்வரி மாதம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர், கொரோனா தொற்றுடன் ஃபிப்ரவரி 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடுமையான காய்ச்சலுடன், சுவாச நோய், அல்சைமர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்னைகள் போன்ற உடல்நலப் பிரச்னைகள் இருந்துள்ளன.

இதனால் இவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 13 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா சிகிச்சைகள் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. படிப்படியாக தேறி வந்த முதியவர் கடந்த மார்ச் 7ம் தேதி முழுவதும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

CHINA, CORONA, COVID-19, RECOVER, 100 YEAR OLDMAN