2 ஆம் உலகப்போர் அப்போ பிரிஞ்சு போன நண்பர்கள்.. உயிரோட இருக்காங்களா-னு கூட தெரில.. 75 வருஷத்துக்கு அப்புறம் நடந்த அதிசயம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிந்துபோன இரண்டு நண்பர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வெள்ளிக்கிழமை 5 மணி வரைதான் டைம் இருக்கு.. தீவிர முயற்சியில் எலான் மஸ்க்.. பரபர பின்னணி..!
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. இணையத்தின் மூலம் பல சாதனைகளை மனிதர்கள் படைத்திருக்கின்றனர். பலரது திறமைகளை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்ல இணையமும் சமூக வலைதளங்களும் உற்ற கருவியாக இருந்திருக்கின்றன. இந்நிலையில் 75 ஆண்டுகளாக பிரிந்திருந்த இரண்டு நண்பர்களை இணையம் ஒன்றிணைத்து இருக்கிறது.
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் அமெரிக்க கப்பற்படையில் வீரர்களாக இருந்த இந்த இரண்டு பேரும் அப்போது பிரிந்து இருக்கிறார்கள். அதன் பிறகு தொடர்ந்து போர் நடைபெற்றதாலும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாலும் இருவருமே மிகவும் கவலை அடைந்து இருக்கின்றனர். சொல்லப் போனால் பிரிந்துபோன நண்பர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதே தெரியாமல் இருவரும் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இதனிடையே சமீபத்தில் தான் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தகவல் தெரிந்திருக்கிறது. அதன்படி 75 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்திருக்கின்றனர். பார்த்தவுடன் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்ட இந்த நண்பர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்து இருக்கின்றனர். இந்த வீடியோவை எரின் ஷா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தனது 96 வயது தாத்தா 75 ஆண்டுகள் கழித்து தன்னுடைய நண்பரை சந்தித்து தனது அன்பை பரிமாறிக் கொண்ட வீடியோவை பகிர்ந்து "நட்பும் அன்பும் எதையும் தாங்கும்" என குறிப்பிட்டு இருக்கிறார் எரின்.
அந்த வீடியோவில் "கடற்படையில் பணியாற்றிய என்னுடைய 96 வயதான தாத்தா இரண்டாம் உலகப் போரின் போது தன்னை விட்டுப் பிரிந்த உயிர் நண்பனை இப்போது சந்தித்திருக்கிறார். ஒகினாவுக்கு அனுப்பப்பட்ட போது எனது தாத்தாவும் அவரது நண்பரும் பிரிந்திருக்கின்றனர். போரில் இருந்த சமயத்தில் மற்றவர்கள் உயிர்பிழைத்தார்களா இல்லையா என்பது இருவருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் தாத்தாவின் நண்பர் குடும்பத்தினருடைய சமூக வலைதள பக்கம் மூலம் அவரை கண்டறிய முடிந்தது" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரையில் 26 ஆயிரம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் நாட்டிற்காக சேவை செய்ததற்கு இருவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read | "காசு இல்லைன்னாலும்.. நான் இருக்கேன்".. காலணி தைப்பவரை நெகிழ வைத்த உணவு விற்பனையாளர்.. வீடியோ..!
மற்ற செய்திகள்