வாழ்க்கையில முக்கால்வாசி நாள் வானத்துலயே கழிச்சிருக்காங்க.. உலகின் வயதான விமான பணிப்பெண்.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த வயதான விமான பணிப்பெண் ஒருவரை கின்னஸ் நிர்வாகம் சான்றளித்து கவுரவப்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில முக்கால்வாசி நாள் வானத்துலயே கழிச்சிருக்காங்க.. உலகின் வயதான விமான பணிப்பெண்.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்..!

Also Read | லவ்‌.‌.. லிவிங்.. டாட்டூ என பரவசமாய் போய் 13 நாளில் முடிவுக்கு வந்த பரபரப்பு காதல்.!

கின்னஸ்

உலகம் முழுவதும் நடைபெறும் சாதனை முயற்சிகளை கண்டறிந்து அவற்றை அங்கீகரித்து வருகிறது கின்னஸ் நிர்வாகம். அப்படி சாதனை புரிந்தவர்களுக்கு சான்றிதழை வழங்கும் இந்த அமைப்பு, அவர்களது பெயரை புகழ்பெற்ற கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெறச் செய்கிறது. பல்வேறு பிரிவுகளில் உலகிலேயே தனித்துவமாக இருப்பவர்களை , செயல்படுபவர்களை கவுரப்படுத்தும் விதமாக இதனை மேற்கொண்டுவருகிறது கின்னஸ் அமைப்பு. இதன் காரணமாகவே கின்னஸ் புத்தகம் உலகில் அதிகமாக படிக்கப்படும் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

விமான பணிப்பெண்

அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தில் மாசசூசெட்ஸ் நகரை சேர்ந்தவர் பெட்டே நாஷ். இவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை வானிலேயே கழித்துள்ளார். தற்போது வரையிலும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் இவருடைய வயது 86 ஆகும். இவர் 1957 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-ல் விமான பணிப்பெண்ணாக தேர்வாகியுள்ளார். அதாவது முதல் செயற்கை கோள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு தனது வாழ்க்கை பயணத்தையும் துவங்கியிருக்கிறார்.

86 year old woman working for 65 years world oldest flight attendant

இவர் பணிக்கு சேர்ந்த போது, எந்த வழித்தடத்திலும் பயணிக்க அவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அமெரிக்கன் ஏர்லைன்ஸ். ஆனாலும் இவர் நியூயார்க், பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே நாஷ் பயணித்திருக்கிறார். தனக்கு இந்த வழித்தடம் மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனாலேயே வாய்ப்பு கிடைத்தும் தன்னால் வேறு வழித்தடங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்கிறார் இவர்.

65 ஆண்டுகால அனுபவம்

விமான பணிப்பெண்ணாக நாஷ் இதுவரையில் 65 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இது உலகில் வேறு எந்த பெண்ணும் இதுவரையில் செய்யாத சாதனையாகும். குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே பயணிப்பதால் நாஷ்-க்கு ஏராளமான பயணிகளை பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல, நாஷ்-உடன் பேசவும் அவருடன் தங்களுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொள்ளவும் பல பயணிகள் தயாராக இருக்கின்றனர்.

இதுகுறித்து பயணி ஒருவர் பேசுகையில்,"நான் பணிநிமித்தமாக அதிகமாக பயணம் மேற்கொள்பவன். இதுவரையில் பல்லாயிரம் கிலோமீட்டர் விமானத்தில் பயணித்துள்ளேன். ஆனால், விமானத்தில் நாஷ் இருந்தால் தான் எனது அந்த பயணம் சிறப்பானதாக அமையும்" என்றார்.

நாஷ்-க்கு ஒரு மகன் இருக்கிறார். மாற்றுத் திறனாளியான அவரை கவனித்துக்கொள்ளும் நாஷ் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புடனும், அன்புடனும் பழகக்கூடியவர் என்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். இந்நிலையில், 65 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து கின்னஸ் சாதனை படைத்த நாஷ்-க்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Also Read | "எது, தூக்கத்துல இருந்து எழுப்புனா காசா??.." மாசம் 25 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்.. ஐடியா'வ கேட்டு அசந்து போவீங்க..

OLD WOMAN, WORLD OLDEST FLIGHT ATTENDANT, GUINNESS RECORD

மற்ற செய்திகள்