Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

"இதுக்கு தான் வாழ்நாள் மொத்தமா காத்திருந்தேன்".. 81 வயதில் முதல் முறையாக சகோதரியை சந்தித்த முதியவர்.. மனம் உருகும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன் பகுதியை அடுத்த Norfolk என்னும் பகுதியை சேர்ந்தவர் John Ellis. இவர் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் தனது மூத்த சகோதரியுடன் தங்களின் குடும்பம் குறித்து எதுவுமே தெரியாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

"இதுக்கு தான் வாழ்நாள் மொத்தமா காத்திருந்தேன்".. 81 வயதில் முதல் முறையாக சகோதரியை சந்தித்த முதியவர்.. மனம் உருகும் பின்னணி!!

Also Read | விண்வெளியில் இன்னும் 3 நாள்ல நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. வரலாற்றுலயே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. Live ஆ பாக்கலாமாம்..!

அப்படி இருக்கையில், சிறு வயது முதல் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் குறித்து தெரியாமல் வாழ்ந்து வந்த ஜான், அவர்களை பற்றிய விவரங்களை சேகரிக்கவும் வளர்ந்த பின் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மறுபக்கம் லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வரும் 79 வயதாகும் Shirley Jones என்ற பெண்மணி, தனது உடன்பிறப்புகளுடன் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஷிர்லிக்கும் தனது குடும்பம் பற்றி தெரியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

81 yr old man meets her younger sister for first time

இதனால், தங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய விவரத்தை அறிய இணையதளம் ஒன்றை ஷிர்லி தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தங்களுக்கு ஒரு மூத்த சகோதரர் இருப்பதை அறிந்து ஷிர்லி உள்ளிட்ட உடன் பிறப்புகள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளனர். அப்போது தான் Norfolk பகுதியில் இருக்கும் ஜான் எல்லிஸ் அவர்களின் சகோதரர் என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக தனக்கு ஒரு இளைய சகோதரி மட்டுமே இருப்பதாக கருதிய ஜான், மொத்தம் 4 உடன் பிறப்புகள் இருப்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.

தனது சகோதரி ஷிர்லி ஜான்ஸ் குறித்த உண்மை கடந்த சில மாதங்களுக்கு முன் ஜானுக்கு தெரிய வந்த நிலையில், சமீபத்தில் ஆயிரம் மைல் தூரம் பயணம் மேற்கொண்டு முதல் முறையாக தனது சகோதரியை நேரில் பார்த்துள்ளார். அப்படி பார்த்ததும் ஜான் மற்றும் ஷிர்லி ஆகிய இருவரும் ஆனந்த கண்ணீரில் மூழ்கி போயுள்ளனர். 81 வயதில் தனது இளைய சகோதரியை முதன் முதலில் பார்த்ததால் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளார் ஜான் எல்லிஸ்.

81 yr old man meets her younger sister for first time

அது மட்டுமில்லாமல், தனது குடும்பத்தில் உள்ள மொத்தம் 40 பேரை கண்டுபிடிக்கவும் ஜான் எல்லிஸுக்கு முடிந்துள்ளது. அதே வேளையில், 81 வயதாகும் ஜான் எல்லிஸுக்கு தனது தாய் ஏன் சிறு வயதில் தங்களை காப்பகத்தில் விட்டு சென்றார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல, தனது தந்தை குறித்த விவரமும் ஜானுக்கு தெரியாது என தகவல் தெரிவிக்கும் நிலையில், தன்னை காப்பகத்தில் சேர்த்த பின்னர், வேறொருவரை தனது தாய் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டதையும் ஜான் அறிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | ராணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பூக்களுக்கு நடுவே இருந்த விஷயம்.. பாத்ததும் திகைத்து போன இளவரசர் வில்லியம்!!

OLD MAN, MEETS, YOUNGER SISTER

மற்ற செய்திகள்