66 மில்லியன் வருஷ மர்மம்.. கடலுக்கடியே நடந்த ஆராய்ச்சி.. இப்படி ஒன்னு நடந்திருக்கும்னு யாரும் யோசிக்க கூட இல்லை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அட்லாண்டிக் கடலில் 8.5 கிலோமீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்ட பள்ளத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டைனோசர்ஸ்
சூரிய குடும்பத்தில் கோள்களை போலவே விண்கற்கள், சிறு கோள்கள் ஆகியவையும் சூரியனை சுற்றி வருகின்றன. சில நேரங்களில் இவை புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. அப்போது காற்றின் அடர்த்தி காரணமாக அவை தீப்பந்துகளாக மாறி அதிவேகத்துடன் பூமியின் தரைப்பரப்பில் விழும். இவற்றின் வேகம் மற்றும் எடை ஆகியவற்றின் காரணமாக நம்ப முடியாத அளவு சேதங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனோசர்கள் அழிய காரணமாக இருந்தது இப்படியான ஒரு விண்கல் பூமியின் மீது மோதியதன் விளைவாகத்தான்.
பிரம்மாண்ட பள்ளம்
இந்நிலையில், பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக் அடிப்பகுதியில் பிரம்மாண்ட பள்ளம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பள்ளம் விண்கல் மோதலின் காரணமாக உருவாகியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்த பள்ளம் உருவாகி 66 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இன்னொரு சந்தேகத்தையும் ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பள்ளம் அமைந்திருக்கிறது. பூமியில் டைனோசர்கள் அழிய காரணமாக இருந்த விண்கல்லின் ஒரு பாகம் இங்கே விழுந்திருக்கலாம் எனவும் அதனால் இந்த பிரம்மாண்ட பள்ளம் உருவாகியிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதனிடையே இந்த பகுதியில் தொடர் ஆய்வுகள் நடைபெற இருக்கின்றன. கடலுக்கடியே துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வு
இந்தப் பள்ளத்தின் ஆழம் மற்றும் அகலத்தை கணக்கில் கொண்டு இங்கு விழுந்த விண்கல் 400 மீட்டர் அகலம் இருந்திருக்கலாம் எனவும் இதனால் ஒரு கிலோமீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கின்றனர். மேலும், இதனால் 6.5 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்றுவரும் ஆய்வுகள் இன்னும் பல தகவல்களை வெளிக்கொண்டுவரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | ஊழியர்களுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் கொடுத்த CEO-ன் திடீர் அறிவிப்பு.. கலங்கிப்போன பணியாளர்கள்.. என்ன ஆச்சு.?
மற்ற செய்திகள்