"முடியல.. இதான் கடைசி விளம்பரம்.. ஆனா நம்பிக்கை இருக்கு!".. மனைவி இறந்த பின்பு தனியாக வசித்துவரும் முதியவரின் ‘வித்தியாசமான’ விளம்பரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் மனைவி இறந்த நிலையில் பேச்சுத் துணைக்கு ஆளின்றி தனிமையில் தவித்த முதியவர் ஒருவர் தனது வீட்டு ஜன்னலில் செய்த விளம்பரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

"முடியல.. இதான் கடைசி விளம்பரம்.. ஆனா நம்பிக்கை இருக்கு!".. மனைவி இறந்த பின்பு தனியாக வசித்துவரும் முதியவரின் ‘வித்தியாசமான’ விளம்பரம்!

பிரிட்டனில் gloucestershire பகுதியில் குடியிருந்து வரும் 75 வயதான Tony Williams தமக்கு பேச்சுத்துணைக்கு நண்பர் தேவை என்று தமது வீட்டு ஜன்னலில் விளம்பரம் செய்துள்ளார். கடந்த மே மாதம் தனது மனைவியை இழந்த Tony Williams அன்றில் இருந்து ஒரு நாள் கூட எவருடனும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

பிள்ளைகள் ஏதும் இல்லாத நிலையில் குடும்பத்தினரும் அருகாமையிலும் குடியிருக்காத சூழலில், தனிமையில் வாடும் தனக்கு பேச்சுத் துணைக்கு ஒரு நண்பர் தேவை என உள்ளூர் பத்திரிகையில் இரண்டு விளம்பரம் செய்துள்ளதோடு எந்த பலனும் அதனால் இல்லை என்பதால் தொடர்ந்து முகவரி அட்டை ஒன்றை தயாரித்து வெளியே செல்லும் இடங்களில் மக்களுக்கு கொடுத்து வருகிறார் Tony Williams.

அத்துடன் ஒன்றாக இசையை ரசிக்கவும், தோட்டத்தில் அமர்ந்து கதைகள் பேசவும் நண்பர்கள் வேணும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தபடி ஒரு பதாகையை தனது வீட்டு ஜன்னலில் பதித்துள்ளார். இது தமது புதிய நண்பர்களை தேடுவதற்கான கடைசி முயற்சி என்று தெரிவித்த அவர், தனது குடியிருப்பு வழியே எவரும் பெரிதாக கடந்து போவதில்லை என்றாலும் யாரேனும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்