மறுபடியும் முழு ‘ஊரடங்கு’.. பதற்றத்தில் சொந்த ஊருக்கு ‘படையெடுத்த’ மக்கள்.. ‘700 கிமீ’ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்.. ‘ஸ்தம்பித்து’ போன நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் பதற்றத்தில் சொந்த ஊருக்கு கிளம்பியதால் சுமார் 700 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டிசம்பர் மாதம் 1ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் எம்மானுவேல் மெக்ரான் திடீரென அறிவித்தார்.
இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பால் பதற்றமடைந்த மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்தனர். நாட்டின் பல நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருந்தவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்தவர்கள் என அனைவரும் குவிந்ததால் பல மணிநேரத்துக்கும் மேலாக வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
இதில் பாரீஸ் நகரில் இருந்து மக்கள் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால் சுமார் 700 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பிரான்ஸ் நாடே ஸ்தம்பித்து போனது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது ஓரளவுக்கு குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மற்ற செய்திகள்