"கல்யாணத்துக்கு முன்னாடி வீடியோ கால்-லாம் தப்பு".. மேட்ரிமோனியில் வலைவிரித்த பெண்.. காசை வாரி இறைத்த இளைஞருக்கு வந்த திடீர் சந்தேகம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிங்கப்பூரில் திருமணம் செய்துகொள்வதாக இளைஞரிடம் பணம் பறித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு 7 மாத கால சிறைத்தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

"கல்யாணத்துக்கு முன்னாடி வீடியோ கால்-லாம் தப்பு".. மேட்ரிமோனியில் வலைவிரித்த பெண்.. காசை வாரி இறைத்த இளைஞருக்கு வந்த திடீர் சந்தேகம்..!

Also Read | வீட்டுக்கு தெரியாம காதல் திருமணம் செய்துகொண்ட மகள்.. கோர்ட்டுக்கு சென்ற பெற்றோர்..மணப்பெண்ணுக்கு ஜட்ஜ் கொடுத்த வார்னிங்..!

சிங்கப்பூரில் வசித்துவரும் இந்தியரான கோவிந்தனசேகரன் முரளிகிருஷ்ணா தனது மகனுக்கு பெண்தேட முடிவெடுத்திருக்கிறார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் தனது மகனின் பெயரில் புரொஃபைல் ஒன்றை துவங்கியுள்ளார். அப்போது, கீர்த்தனா என்னும் பெண் புரொஃபைலை பார்த்த முரளிகிருஷ்ணா தனது மகனிடம் காட்டியுள்ளார். குடும்பத்தினருக்கு பெண்ணின் புகைப்படம் மற்றும் படிப்பு ஆகியவை பிடித்துப்போகவே தொடர்ந்து அந்த பெண்ணிடம் விஷயத்தை கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேலை

வாட்சாப் மூலமாக கீர்த்தனா என்னும் அந்த பெண்ணிடம் திருமணம் குறித்து முரளிகிருஷ்ணா பேச, அப்பெண்ணும் தனது தாயாரிடத்தில் இதுபற்றி பேசுவதாக கூறியுள்ளார். தான் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு படையில் வேலைபார்த்து வருவதாகவும், வீடியோ கால் பேச இங்கே அனுமதி இல்லை எனவும் அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்க்கு முன்னர் வீடியோ கால் பேசுவது தவறானது எனவும் உருட்டியுள்ளார் அந்த பெண்.

இதனை அடுத்து மாத கணக்கில் முரளி கிருஷ்ணாவின் மகனும், கீர்த்தனா என்ற பெயரில் இருந்த பெண்ணும்  வாட்சப் மூலமாக பேசிவந்திருக்கின்றனர். இந்நிலையில் மாப்பிள்ளையிடமும் அவரது அப்பாவிடமும் அவ்வப்போது பணத்தை வாங்கியுள்ளார் அந்த பெண். இப்படி மொத்தமாக 5,000 சிங்கப்பூர் டாலர்களை வாங்கிய அந்த பெண் திடீரென அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.

51 year old Indian woman jailed in Singapore for duping man

புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த முரளிகிருஷ்ணாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் சிங்கப்பூரில் வசித்துவந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மல்லிகா ராமு என்னும் 51 வயது பெண்மணி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தனது உறவினர் ஒருவருடைய புகைப்படத்தை தனது புகைப்படமாக புரொஃபைலில் வைத்து முரளி கிருஷ்ணாவை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும், இவர் மீது 15 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற வழக்கும் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த வழக்கில் ஏற்கனவே சிறைத்தண்டனை பெற்ற மல்லிகா கணவனை இழந்தவர் என்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இதுவரையில் மேட்ரிமோனி மூலமாக ஆண்களை ஏமாற்றி 2.25 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை இவர் பெற்றிருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், முரளிகிருஷ்ணா தொடுத்த வழக்கில் மல்லிகா என்னும் 51 வயது பெண்மணிக்கு 7 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது சிங்கப்பூர் நீதிமன்றம்.

Also Read | "கணவரை கொலை செய்வது எப்படி..?" புத்தகம் எழுதிய 71 வயது பெண்மணிக்கு 25 வருடம் சிறை தண்டனை.. என்ன நடந்தது.?

INDIAN WOMAN, JAIL, SINGAPORE, DUPING MAN

மற்ற செய்திகள்