பெரும் சோகம்! 5 இந்திய மாணவர்கள் மரணம்.. கனடா இந்திய தூதர் வெளியிட்ட செய்தி..! நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்கனடா நாட்டில் கடந்த சனிக்கிழமை நேர்ந்த விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலியானதாக கனடாவுக்கான இந்திய தூதர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
5 இந்திய மாணவர்கள்
கனடாவின் டொரோண்டோ நகரத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். ட்ரெண்டன் - பெல்லிவில்லே பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிரே சென்ற டிராக்டர் டிரெய்லரில் இந்திய மாணவர்கள் சென்ற வேன் மோதி இருக்கிறது. இதன் காரணமாக வேனில் இருந்த ஜஸ்பிந்தர் சிங் (21), கரண்பால் சிங் (22), மோஹித் சவுகான் (23), பவன் குமார் (23) மற்றும் ஹார்ப்ரீத் சிங் (24) ஆகிய ஐந்து இந்திய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்கள். மேலும், வேனில் பயணித்த இரண்டு இந்திய மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாண்டீரியல் மற்றும் கிரேட்டர் டொரோண்டோ பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் பயின்று வந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை உறுதிப்படுத்தியுள்ள கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா தனது டிவிட்டர் பக்கத்தில்," நெஞ்சை பிளக்கும் சோக சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. சனிக்கிழமை டொரோண்டோ அருகே நேர்ந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் நண்பர்களுடன் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்
கனடாவில் சாலை விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் டிவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,"கனடாவில் சாலை விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கனடாவில் நேர்ந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பல தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்