‘எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 5 நாள் சந்தோஷமா இருங்க!’.. ஆனா அதுக்கு அப்புறம்?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது குடும்பங்ளுடன் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும் என விரும்புவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

‘எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 5 நாள் சந்தோஷமா இருங்க!’.. ஆனா அதுக்கு அப்புறம்?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இந்த பண்டிகை நாட்களான 5 நாட்கள் மட்டுமாவது மக்கள் குடும்பத்தினருடன் இணைந்து இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் இந்த திட்டத்தை முன்வைத்தனர். எனினும் டிசம்பர் 24 முதல் 28 ஆம் தேதி வரை குடும்பங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த பண்டிகையை கொண்டாடவும்,  தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்துவதற்கு அனுமதிக்கப் படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் இந்த கட்டுப்பாடுகள் விலக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் இணையாக 5 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதும் அவசியம் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை மூத்த மருத்துவர் Susan Hopkins தெரிவித்துள்ளார். அதாவது 5 நாட்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கால கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அதே நேரத்தில் அதற்கு பின்னான 25 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இன்னும் விளக்கமாகச் சொன்னால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் மக்கள் பண்டிகையைக் கொண்டாடி முடித்து விட்டு நாடு முழுவதும் மீண்டும் ஏதாவது ஒரு வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடக்கப்படும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

அதேசமயம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் விரும்பினால் அதற்கு ஆயத்தம் ஆகும் வகையில் டிசம்பரில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வகையிலான முயற்சிகளை செய்ய  மக்கள் பணிக்கப்படுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பிரதமர் இந்த 5 நாட்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரிஸ் எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர். இந்த விதிவிலக்குகளை பிரதமர் அறிவித்தால், அவரை எல்லோரும் குற்றம்சாட்டுகிறார்கள் என்றும் நாடாளுமன்ற கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்