மரண தண்டையே வேண்டாம்னு இருந்த ஊர்..! உலகை உலுக்கிய இஸ்மாயில் படுகொலைக்காக 49 பேருக்கு விதித்து தீர்ப்பு.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் சமூக ஆர்வலர் ஒருவர் தீயிட்டு கொல்லப்பட்ட வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம்  49 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டையே வேண்டாம்னு இருந்த ஊர்..! உலகை உலுக்கிய இஸ்மாயில் படுகொலைக்காக 49 பேருக்கு விதித்து தீர்ப்பு.!

அல்ஜீரியாவை சேர்ந்தவர் 38 வயதான பென் இஸ்மாயில் [Ben Ismail's]. ஓவியர், இசை கலைஞர், சமூக ஆர்வலகர், சமூக சேவகர் என பன்முகம் கொண்ட இஸ்மாயில் அல்ஜீரியாவின் மிலியானா பகுதியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு டிசி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்த இவர் அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க உதவியுள்ளார். அத்துடன் அந்த தீ விபத்தில் சிக்கியவர்களை இஸ்மாயில் மீட்கவும் செய்தார். 

இதனிடையே காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணமே இஸ்மாயில்தான் என நம்பத் தொடங்கிய உள்ளூர்வாசிகள், இஸ்மாயில் மீது தாக்குதல் நிகழ்த்தி, அவர் மீது தீ வைத்துக் கொன்றுள்ளனர். அல்ஜீரியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில் பலரும் பலியாகினர். ஓவியம் தீட்டும் பணி செய்த இஸ்மாயில் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பான இந்த வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்புடைய 28 பேருக்கு இரண்டு ஆண்டுகள் (பரோல் இல்லாத) சிறைத் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக இங்கு ஆயுள் தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. மரணத் தண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான், இஸ்மாயிலுக்கு ஏற்பட்ட இந்த துயரத்துக்காக மீண்டும் மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இப்போது வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ALGERIA, BEN ISMAIL

மற்ற செய்திகள்