"ஹிட்லர் கிட்ட இருந்தே 4 தடவை தப்பிச்ச மனுஷன்"... "இப்படி பண்ணீட்டீங்களே".. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹிட்லரின் முகாம்களிலிருந்து நான்கு முறை தப்பித்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தற்போது ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். இதற்கு அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ரூ.69 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்? சுவாரஸ்ய பின்னணி..
போர்
நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதை கடுமையாக எதிர்த்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து தரை, வான் மற்றும் கடல் என அனைத்து பகுதிகளிலிருந்தும் ரஷ்ய ராணுவம் உக்ரைனை தாக்க தொடங்கியது. இதுவரையில் சுமார் 925 உக்ரைன் மக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
ஷெல் தாக்குதல்
இந்நிலையில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆன ஹிட்லரின் முகாம்களிலிருந்து நான்கு முறை தப்பித்த உக்ரைனை சேர்ந்த 96 வயது முதியவரான போரிஸ் ரோமன்சென்கோ என்பவர் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலின் காரணமாக இப்போது மரணம் அடைந்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலின் போது இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டிவிட்டரில் “96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ கார்கீவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இவர் புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி முகாம்களில் இருந்து தப்பியவர். கடந்த வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இவர் மரணமடைந்துள்ளார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பத்மஸ்ரீ விருது நிகழ்வில் பிரதமர் முன் விழுந்த 126 வயது முதியவர்.. யார் இந்த சுவாமி சிவானந்தா?..
மற்ற செய்திகள்