"ஆத்தாடி ஆத்தா".. டைனோசருக்கு முன்பே வாழ்ந்த மீன்.. உடைந்த 38 கோடி ஆண்டு ரகசியம்.. "மனிதர்கள் கூடயும் ஒரு இப்படி ஒரு தொடர்பு இருக்காமே!!"
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது இந்த பூமிக்குள் புதைந்து கிடக்கும் பல அரிய தகவல்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சியாளர்கள் நிறைய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முடிவுகளில் தெரிய வரும் விஷயம் என்பது உலகிலுள்ள மக்கள் அனைவரையும் கடும் ஆச்சரியத்திலும், வியப்பிலும் உறைந்து போக வைக்கும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக அவ்வப்போது நடக்கும் ஆய்வு முடிவுகள் நமக்கு ஏராளமான விஷயங்களை எடுத்துரைக்கும்.
அந்த வகையில், தற்போது ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் முடிவுகள், சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புள்ள விஷயம் ஒன்றை வெளியே தெரிய வைத்து பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற கார்டின் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருள் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்படி இருக்கையில், மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் ஒரு மீனின் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் முடிவில் தெரிய வந்த உண்மை என்ன என்பது தான், ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மீனில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இதயம் என்பது சுமார் 38 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதுவரை தங்களின் ஆராய்ச்சி பணியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது தான் என்றும் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மீனின் இதயத்தில் உள்ள அம்சங்கள் குறித்து வெளியான தகவலின் படி, கோ கோ என அழைக்கப்படும் இந்த மீனானது இப்போது அழிந்து விட்டது என்றும் மேலும் இந்த மீன் வகை டைனோசர்கள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த மீனின் இதயம் மற்ற மீன்களை விட பரிணாம வளர்ச்சி அடைந்திருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அத்துடன் மனிதர்களின் இதயம் போன்றே இந்த மீனின் இதயமும் இருந்துள்ளது இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், மனிதர்களின் உடல் அமைப்பை விளக்குவதற்கு இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக பார்க்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
மற்ற செய்திகள்