அமெரிக்காவில் தூய எஃகினால் வடிமைக்கப்பட்ட, 33 ஆண்டுகள் பழமையான முயல் சிலை 640 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க கலைஞரான ஜெஃப் கூன்ஸ் (Jeff Koons) என்பவர், 1986ம் ஆண்டு வடிவமைத்த இந்த முயல் சிலை, 104 செண்டி மீட்டர் உயரம் கொண்டதாகும். முகமின்றி கையில் கேரட்டை பிடித்தவாறு நிற்கும் இந்த முயல் சிலை தான் தற்போது அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. 91.1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்க்கு இந்த முயல் சிலை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரிட்டிஷ் ஓவியர் டேவிட் ஹாக்னீயின் (David Hockney) ஓவியம், 634 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை ஜெஃப் கூன்ஸின் முயல் சிலை முறியடித்துள்ளது.
இந்நிலையில், ஏலம் எடுத்தவரின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், வாழும் கலைஞர் ஒருவரின் கலைப்படைப்பு இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரிய சாதனை என கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.