'3000' வருட பழமையான 'மம்மி' பேசியது... 'சாதித்துக்' காட்டிய 'விஞ்ஞானிகள்'... நிஜமானது 'மம்மி ரிட்டர்ன்ஸ்' கதை...
முகப்பு > செய்திகள் > உலகம்3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்திய மதகுருவின் இறந்த உடலுக்கு, ஆய்வாளர்கள் குரல் வளையை உருவாக்கி பேச வைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எகிப்தில், கி.மு. 1099 காலகட்டத்தில் வாழ்ந்தவர் நெஸ்யமன் என்ற மதகுரு. இவர் 1069 ல் காலமானார். பொதுவாக அக்காலத்தில் உயிரிழந்த அரசு குடும்பத்தினரின் உடலை பதப்படுத்தி வைக்கும் நடைமுறை உண்டு. இதற்கு மம்மி என பெயர். அதுபோல் நெஸ்யமனின் உடலும் பதப்படுத்தி வைக்கப்பட்டது. அவரது கல்லறையில் 3000 ஆண்டுகளுக்குப் பிறகு எனது குரல் மீண்டும் ஒலிக்கும் என எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், தொல்பொருள் ஆய்வாளர்கள் நெஸ்யமன் மம்மியை சமீபத்தில் கண்டுபிடித்தனர். இவருக்கு குரல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம், ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது. எனவே, அவரது குரல் எப்படி இருந்திருக்கும் என ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தனர்.
நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டது. அதை வைத்து, 3டி அமைப்பில் செயற்கையாக குரல் உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பை பயன்படுத்தி, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் ஒரிஜினல் குரலை உருவாக்கினர்.
குரல் மறு உருவாக்கம் தொழில்நுட்பம் மூலம் இந்த சாதனையை ஆய்வாளர்கள் நிகழ்த்திக் காட்டினர்.
3000 ஆண்டுகளுக்கு பிறகு நெஸ்யமனின் வாக்கு பலித்திருப்பதைக் கண்டு ஆய்வாளர்களே சற்று வியந்து போயுள்ளனர். ஒருவேளை தாங்கள் தான் அவரது வாக்கை நிறைவேற்றுவதற்காக பணிக்கப்பட்டவர்களோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்புகின்றனர்.