காதலனுக்கு Good Bye.. 54 வயசு முதியவரை திருமணம் செய்த இளம்பெண்.. இப்ப இப்படி ஒரு சிக்கலா.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த 30 வயது பெண் தன்னைவிட 24 வயது மூத்தவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

காதலனுக்கு Good Bye.. 54 வயசு முதியவரை திருமணம் செய்த இளம்பெண்.. இப்ப இப்படி ஒரு சிக்கலா.?

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | தோனி & ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்.. இதுக்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு.. இந்திய அணியை துரத்தும் சோகம்.. வைரல் வீடியோ

பொதுவாக காதலுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. இனம், மொழி, தேசம் அத்தனையையும் மறக்கடிக்கும் காதல் பலகோடி மக்களை ஆச்சர்யமளிக்கும் வகையில் இணைத்திருக்கிறது. அந்த வகையில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த அமண்டா எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தின் மோரிஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் அமண்டா கேனான். இவருக்கு 30 வயதாகிறது. இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இருவரும் நண்பர்களாகி இருக்கின்றனர். இதை தொடர்ந்து, இவர்களது நட்பு காதலாக பரிணமித்திருக்கிறது. இதுகுறித்து தனது வீட்டினரிடம் அமண்டா பேசியிருக்கிறார். இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், அமண்டா இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.

30 YO woman Marry 54 YO man after calls off her wedding

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"அந்த உறவில் நான் நானாக இருக்க முடியவில்லை. இது என்னை மோசமாக உணரவைத்தது. ஆகவே அதிலிருந்து மீண்டு வர நினைத்தேன்" என்கிறார். அதன் பிறகு ஏஸ் (வயது 54) என்பவரை சந்தித்திருக்கிறார் அமண்டா. பார்த்த உடனேயே அவரை அமண்டாவிற்கு பிடித்துப்போய்விட்டது. விரைவிலேயே இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்த கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

30 YO woman Marry 54 YO man after calls off her wedding

Images are subject to © copyright to their respective owners.

ஏஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருப்பினும் தனக்கு அமண்டாவை திருமணம் செய்ய பெரும் விருப்பம் இருந்ததாக தெரிவித்திருக்கிறார் அவர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமண்டா,"உண்மையில் காதலுக்கு வயது வித்தியாசம் கிடையாது. காதல் எப்படி இருந்தாலும் காதலாகவே இருக்கும். எங்களுடைய மனம் வெவ்வேறு காலங்களை சேர்ந்தது அவ்வளவு தான். பார்த்த உடனேயே இருவருக்கும் பிடித்துப்போய்விட்டது. நம்பர்களை மாற்றிக்கொண்டோம். அப்படியே காதல் எங்களை திருமணம் வரை அழைத்துச் சென்றது" என்றார்.

மேலும்,"ஏஸ்-க்கும் என்னுடைய தாயாருக்கும் ஒரே வயது. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சில நேரங்களில் நாங்கள் தந்தை மகள் என சிலர் நினைத்துவிடுகிறார்கள். இது சகஜம் தான்.இப்படியான அனுபவங்கள் கிடைக்கும் என எனக்கு தெரியும். ஆனாலும் அவர்மீது நான் கொண்டுள்ள அன்பு மாறாது" எனத் தெரிவித்திருக்கிறார் அமண்டா. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார் அமண்டா.

Also Read | “வலதுபுற மார்பகத்தையே அகற்றிட்டாங்க” .. 'அங்காடித் தெரு’ சிந்துவுக்கு இப்படி ஒரு கஷ்டமா.. கலங்க வைக்கும் பேட்டி! வீடியோ

OLD MAN, WOMAN, MARRY, WEDDING

மற்ற செய்திகள்