நேருக்கு நேராக... 'மோதிக்கொண்ட' வாகனங்கள்... உடல்கருகி.. 'ஒரே' குடும்பத்தை சேர்ந்த 28 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பவ்ஜ் என்னும்  நகரில் உள்ள நெடுஞ்சாலையில் 28 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றது. குபி ஹரி என்ற பகுதியை வேன் கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் சென்ற லாரி மீது மோதியது. அந்த லாரி மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

நேருக்கு நேராக... 'மோதிக்கொண்ட' வாகனங்கள்... உடல்கருகி.. 'ஒரே' குடும்பத்தை சேர்ந்த 28 பேர் பலி!

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல்கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 பேர் பலியாகினர். டிரைவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அதேபோல மாடுகளும் தீயில் கருகி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரிய நாட்டில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாலும், பயணிகளை அதிகளவில் ஏற்றிச்செல்வதாலும்  இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது.