Battery Mobile Logo Top

"வயசு 27 ஆகுதுங்க.. ஆனா பாக்க சின்ன பையன் மாதிரி இருக்கேன்னு சொல்லி.." வேதனையில் புலம்பும் இளைஞர்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

27 வயது இளைஞர் ஒருவர், பார்ப்பதற்கு சிறுவன் போல் இருப்பதால், தனக்கு நேர்ந்து வரும் துயரம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி உள்ளது.

"வயசு 27 ஆகுதுங்க.. ஆனா பாக்க சின்ன பையன் மாதிரி இருக்கேன்னு சொல்லி.." வேதனையில் புலம்பும் இளைஞர்..

Also Read | இந்தியாவுலயே பணக்கார பெண் இவங்கதானாம்.. சொத்து மதிப்பை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.. உலகத்தை திரும்பி பார்க்க வச்ச தமிழ்ப்பெண்..!

சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்தவர் Mao Sheng. இவருக்கு வயது 27. ஆனாலும் ஆள் பார்ப்பதற்கு மிகவும் ஒரு குழந்தை போல தோற்றத்துடன் விளங்குகிறார். மிகவும் இளமையாக அதே வேளையில் குழந்தை தோற்றுத்துடன் இருக்கும் இவருக்கு அதுவே மிகப்பெரிய ஒரு பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

27 வயது ஆவதால் வேலைக்கு சென்று தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்றும் Mao விரும்பி உள்ளார். ஆனால் அவரது தோற்றம், ஒரு குழந்தையைப் போல இருப்பதால் எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்க தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் அவருக்கு வேலை கொடுக்க தயாராக இருந்தாலும், அங்கு வரும் அதிகாரிகள் யாராவது அவரைப் பார்த்து குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவதாகவும் நினைக்கலாம் என்ற அச்சத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள தயங்குகிறார்கள்.

27 yr old man says he dont find job because he is like child

வேலைக்கு சென்று பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய பருவத்தில், பார்ப்பதற்கு குழந்தை போல இருப்பதாக கூறி வேலை கிடைக்காமல் இருப்பதால், தனது விரக்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை Mao வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த வீடியோவில் பேசும் Mao, தனக்கு வேலை கிடைக்காததால் பொருளாதார ரீதியாக தனது தந்தைக்கு எந்த ஆதரவையும் அவரால் அளிக்க முடியவில்லை என்று வேதனையுடன் பேசுகிறார். மேலும் ஒரு வீடியோவில் தான் 1995ல் பிறந்ததற்கான அடையாள அட்டை ஒன்றையும் காண்பிக்கிறார்.

27 yr old man says he dont find job because he is like child

தான் பேசும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆனதை பற்றி அறிந்த மாவோ, இந்த வீடியோவை தனது குடும்பத்தினர் கண்டால் தன்னை நினைத்து எரிச்சல் அடைவார்கள் என்றும், வேலை தேடுவதை பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூட அவர்கள் நினைக்க கூடும் என்றும் கவலை பட்டுள்ளார்.

Mao-வின் வீடியோ அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவரது திறமையை பார்த்து தான் வேலை கொடுக்க வேண்டுமே இல்லாமல் தோற்றத்தை வைத்துக் கொடுக்க கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனிடையே வேலையில்லாமல் விரக்தியில் இருப்பதாக Mao வெளியிட்ட வீடியோ, பல பேரால் கவனிக்கப்பட்ட நிலையில், சிலர் அவருக்கு வேலை கொடுக்க முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | காலையில 4:30 க்கு Wakeup.. "என் கையால சமைச்சு.." 90 வயதில் சல்யூட் போட வைத்த 'Grandma'!!

JOBS, MAN, CHILD, MAN LOOK LIKE CHILD

மற்ற செய்திகள்