பள்ளத்தாக்கில் 'திடீரென' கவிழ்ந்த பஸ்... 'அலறித்துடித்த' பயணிகள்... சம்பவ இடத்திலேயே '25 பேர்' பலி... 62 பேர் படுகாயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் ஆப்பிரிக்கா நாட்டில் பள்ளத்தாக்கில் திடீரென பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியாகினர்.

பள்ளத்தாக்கில் 'திடீரென' கவிழ்ந்த பஸ்... 'அலறித்துடித்த' பயணிகள்... சம்பவ இடத்திலேயே '25 பேர்' பலி... 62 பேர் படுகாயம்!

தென் ஆப்பிரிக்க நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் என்னும் இடத்தில் உள்ள பட்டர் ஒர்த் என்னும் நகரில் இருந்து  ஹிபி என்னும் நகருக்கு நேற்று 80-க்கும் அதிகமான பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. குவால்வினி என்னும் இடத்தை கடந்தபோது பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 62 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் சாலை விபத்தில் இறந்துள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.