'Mom, நான் இவரை தான் காதலிக்கிறேன்'... 'என்ன சொன்ன இவரையா'?... பெண்ணின் காதலனை பார்த்து நொறுங்கிப்போன பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தான் இவரைத் தான் காதலிக்கிறேன் என இளம்பெண் கூறிய நிலையில் அவரது காதலனைப் பார்த்து குடும்பமே அதிர்ந்து போனது.

'Mom, நான் இவரை தான் காதலிக்கிறேன்'... 'என்ன சொன்ன இவரையா'?... பெண்ணின் காதலனை பார்த்து நொறுங்கிப்போன பெற்றோர்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Conni Cotten. 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணான Conni, போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்துள்ளார். பின்னர் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனம் மூலம் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அப்போது அங்குப் பயிற்சிக்காகச் சென்று வந்த போது, 68 வயது மதிக்கத்தக்க Herb Dickerson என்ற முதியவரை Conni அங்குச் சந்தித்துள்ளார்.

24 Years young woman fell in love with man, 68

Dickersonனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அந்த தொண்டு நிறுவனம் மூலம் போதை பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். இருவரும் முதலில் போதைப் பொருட்களை பயன்படுத்தி பின்னர் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தனர் என்பது குறித்துப் பேசி வந்துள்ளார்கள். பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில், அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

24 Years young woman fell in love with man, 68

ஒருகட்டத்தில் தனது காதலனை Conni Cotten தனது வீட்டிற்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இவரைத் தான் காதலிப்பாகக் கூறியுள்ளார் Conni Cotten. ஆனால் மகள் சொன்னதைக் கேட்டு Conniயின் பெற்றோர் அதிர்ந்து போனார்கள். அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த சூழ்நிலையில் 24 வயது இளம்பெண் Conni Cotten, 68 வயதான Herb Dickersonயை காதலிப்பது குறித்து பலரும் கிண்டல் செய்தார்கள்.

சமூகவலைத்தளங்களில் இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்தால், Conniயின் காதல் உண்மை இல்லை என்றும் அவர்  Herb Dickersonனிடம் இருக்கும் பணத்திற்காக மட்டுமே காதலிப்பதாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால் இதுகுறித்து எல்லாம் கவலைப்படாத Conni Cotten, ''அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார், சந்தோஷப்படுத்துகிறார் என்பது எனக்குத் தெரியும். என் குடும்பமும் ஆரம்பத்தில் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அவர்களும் காலப்போக்கில் எங்களை ஏற்றுக் கொண்டனர்.

24 Years young woman fell in love with man, 68

எங்கள் காதலின் ஆழத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். நான் பணத்திற்காக தான் காதலிக்கிறேன், Dickerson எனது இளமைக்காகத் தான் என்னை காதலிக்கிறார் எனக் கூறுபவர்களைக் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. காரணம் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போதும், எங்களுக்கான நேரத்தைச் செலவிடும் போதும் எங்களுக்குள் இருக்கும் காதலை உணர்கிறோம். அதுவே எங்களுக்கு போதுமானது'' என Conni Cotten தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்