'சும்மா வாயு பிடியா இருக்கும்'... 'நெஞ்சு வலியை அசால்ட்டாக விட்ட இளைஞர்'... 'காத்திருந்த பேரதிர்ச்சி'... ஆச்சரியத்தில் உறைந்து போன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இதயத்தில் ஏற்பட்ட வலியைச் சாதாரணமாக விட்ட இளைஞருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் முஹம்மது அர்ஷத். 25 வயது இளைஞரான இவர், அபுதாபியில் முசபா என்ற பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு அவ்வப்போது இதயத்தில் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வலியைச் சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர், எதாவது வாயு தொல்லையாக இருக்கலாம் எனக் கடந்து சென்றுள்ளார். நாளடைவில் வலி அதிகமானதால் பயந்துபோன அர்ஷத் இதய சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் அவருக்குத் தெரிய வந்தது.
மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு இதயத்தமனியில் தீவிரமான பிரச்சனை இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமானதால், அங்கிருந்து அபுதாபியிலுள்ள புர்ஜீல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அபாய கட்டத்தை நெருங்கிய நிலையில், அர்ஷத்தின் நிலைமை மிகவும் மோசமானது.
இதையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. மருத்துவர் வாலிட் ஷேக்கர் தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. கடந்த 16 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கிய அறுவை சிகிச்சை அடுத்த நாள் காலை 6 மணிக்கு நிறைவுற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இது குறித்து மருத்துவர் வாலிட் ஷேக்கர் கூறும் போது, இதயத்தில் இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகாவிட்டால் அவர் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்து விடுவார். ஆனால் முஹம்மது அர்ஷத் காப்பாற்றப்பட்டது அதிசயத்திலும் அதிசயம்தான். இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவ்வளவு தாமதமாகச் சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர் முதன் முறையாகக் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த இதய பிரச்சனைக்கு அவரது மரபணுவிலிருந்த பிரச்சனையே காரணம்'' என்று மருத்துவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்