'பிசிஆர். சோதனையில்' 5ல் ஒருவருக்கு 'தவறான முடிவு?' 'ஜான் ஹாப்கின்ஸ்' விஞ்ஞானிகள் 'ஆய்வுக் கட்டுரையில்' தகவல்... "என்னங்கய்யா இத்தன நாள் கழிச்சு சொல்றீங்க..."
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று உள்ளதா? என்பதைக் கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முறையில் 21 சதவீதம் அளவுக்கு அதாவது 5ல் ஒருவருக்கு தவறான முடிவைக் காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா என்பதைக் கண்டிறிய ஆர்டி.பிசிஆர் என்ற பரிசோதனை முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 5 பரிசோதனைகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் முடிவு தவறாக காட்டப்பட வாய்ப்பிருப்பதாக, அமெரிக்காவின் பால்டிமோரைச் சேர்ந்த john hopkins Medicine விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்த முடிவுகளின் துல்லியத்தன்மை மாறுபடுகிறது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை எடுக்கும் போது 67 சதவீதம் தவறாக வாய்ப்பிருப்பதாகவும், 8 வதுநாளில் எடுக்கும் போது, பரிசோதனை முடிவு தவறாகப் போவதற்கான வாய்ப்பு 21 சதவீதமாக குறைந்து விடுவதாகவும் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS