Naane Varuven M Logo Top

அமைதிக்கான நோபல் பரிசு.. பெலாரஸ் வழக்கறிஞர், ரஷ்யா மற்றும் உக்ரேனை சேர்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கும், ரஷியா மற்றும் உக்ரைனின் மனித உரிமை அமைப்புகளுக்கும் இந்த வருடத்திற்கான விருது அளிக்கப்படுவதாக நோபல கமிட்டி அறிவித்திருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசு.. பெலாரஸ் வழக்கறிஞர், ரஷ்யா மற்றும் உக்ரேனை சேர்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.. முழுவிபரம்..!

Also Read | SARA LEE: முன்னாள் WWE வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நோபல் பரிசு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக 3ம் தேதி அன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்விற்காக ஸ்வான்டே பாபோவிற்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கடந்த நான்காம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகியோர் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

2022 Nobel Peace Prize awarded to human rights advocate Ales Bialiatsk

வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி,டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த எழுத்தாளரான அனி எர்னாக்ஸ் என்பவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு

இந்நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர், ரஷ்யா மற்றும் உக்ரேனை சேர்ந்த மனித உரிமை அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக பெலாரசை சேர்ந்த வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதேபோல ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் (human rights organisations Memorial) மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு (Center for Civil Liberties) ஆகியவையும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற இருக்கின்றன.

 

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் நடைபெறும் போர்க்குற்றங்கள் தொடர்பாக தொடர்ந்து உலகிற்கு தகவல்களை வெளியிட்டு வருவதற்காக ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகத்துக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பை பாராட்டும் விதத்தில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | புருஷனுக்காக 3 வருஷமா ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த மனைவி.. போலீசில் சிக்கியதும் சொல்லிய விஷயம்.. கதிகலங்கிப்போன உறவினர்கள்..!

NOBEL PRIZE, NOBEL PRIZE 2022, NOBEL PEACE PRIZE, ADVOCATE ALES BIALIATSKI

மற்ற செய்திகள்