‘அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி’...!! ‘தொடர்ந்து முன்னிலை வகிப்பது யார்?’... வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பு...!!! அமெரிக்க வாழ் தமிழர்கள் பகுதியில் யாருக்கு செல்வாக்கு???
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகளே உற்றுநோக்கும் மிக முக்கிய தேர்தலான அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பிடன் தொடரந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்னடைவில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி இரண்டு அதிபர் வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு 224 எலக்ட்ரல் வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 213 எலக்ட்ரல் வாக்குகள் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். தற்போது பிடன் வெற்றிபெறுவதற்கு 46 வாக்குகளை பெற வேண்டும். அதேபோல் டிரம்ப் வெற்றி பெற 57 வாக்குகளை பெற வேண்டும். டிரம்ப் இதில் வேகமாக முன்னேறி வருவதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் முடிவுகள் மாறலாம். அதே சமயம் மக்கள் வாக்குகள் அடிப்படையில் ஜோ பிடனுக்கும்-டிரம்புக்கும் பெரிய இடைவெளி இல்லை. 49.8% மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார் ஜோ பிடன், 48.6% மக்கள் வாக்குகள் டிரம்ப் பெற்றுள்ளார்.
தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொகுதியில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது. ஜோ பிடன் கட்சி அங்கு 1,651,702 வாக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது. டிரம்பின் கட்சி 1,018,309 வாக்குகளை பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்களிடையே ஜோ பைடனுக்கு அமோக ஆதரவு இருப்பதை தொடக்கத்தில் இருந்தே காண முடிந்தது.
மற்ற செய்திகள்