'தனிமையில்' தத்தளிக்கும் கப்பல்... 2000 பேருக்கு 'ஐபோன்களை' இலவசமாக வழங்கிய அரசு... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்ற சொகுசு கப்பல் கடந்த மாதம் ஜனவரி 20-ம் தேதி ஜப்பானிலிருந்து புறப்பட்டு ஹாங்காங்குக்கு 25-ம் தேதி சென்றது. மீண்டும், ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு பிப்ரவரி 3-ம் தேதி ஜப்பான் திருப்பியது. அந்த கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு அவர் பலியானார். இதனால், ஜப்பான் வந்த கப்பல் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கப்பலில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பிறநாட்டு மக்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பயணிகள் உட்பட அந்த கப்பலில் உள்ள 3700 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேலும் 64 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது மொத்தமாக 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் கப்பலில் உள்ள சுமார் 2000 பேருக்கு ஜப்பான் அரசு ஐபோன்களை இலவசமாக வழங்கி இருக்கிறது. மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும் லைன் ஆப் எனும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இந்த ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.