அழகிப்போட்டியில் Make Up க்கு NO சொன்ன இளம்பெண்.. 100 வருஷ வரலாற்றில் நடந்த அதிசயம்.. அவங்க சொன்ன காரணம் தான் செம்ம..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் அழகிப் போட்டியில் முதன்முறையாக ஒப்பனை இல்லாமல் போட்டியிட்டு வருகிறார் இளம்பெண் ஒருவர். இதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

அழகிப்போட்டியில் Make Up க்கு NO சொன்ன இளம்பெண்.. 100 வருஷ வரலாற்றில் நடந்த அதிசயம்.. அவங்க சொன்ன காரணம் தான் செம்ம..!

Also Read | "மகனை பார்க்க போனா Parking-ல தான் தூங்குவேன்".. தாயார் சொன்ன தகவல்.. எலான் மஸ்கின் Reply பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ..!

அழகிப்போட்டி

மிஸ் இங்கிலாந்து போட்டி பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர். அரையிறுதி சுற்று சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இறுதிச் சுற்று வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான மெலிசா ரவூப் என்னும் இளம்பெண் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி உள்ளார். இதில் 40 பெண்களுடன் போட்டிபோட இருக்கிறார் இவர். சிறிதும் ஒப்பனை இன்றி இவர் அரையிறுதி போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். 94 வருடமாக நடைபெற்று வரும் இந்த அழகிப் போட்டியில் இதுபோல ஒப்பனை இன்றி ஒரு போட்டியாளர் கலந்துகொள்வது இதுவே முதல்முறை ஆகும்.

20 year old Miss England finalist competing without makeup

உள் அழகு

லண்டனில் இளங்கலை அரசியல் படிப்பை மேற்கொண்டுவரும் மெலிசா ரவூப் இதுபற்றி பேசுகையில் தான் உள் அழகை ஊக்குவிக்க விரும்புவதாகவும் சமூக ஊடகங்களில் நிலைத்திருக்கும் அழகு குறித்த நிலைப்பாடுகளுக்கு சவால் விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும்,"பல்வேறு வயதுடைய பல பெண்கள் மேக்கப் போடுவதை நான் பார்க்கிறேன். ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்ய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ஒருவர் தனது சொந்த தோலில் மகிழ்ச்சியாக இருந்தால், தனது முகத்தை மேக்கப்பால் மறைக்கக் கூடாது. நமது குறைபாடுகள் நம்மை நாமாக ஆக்குகின்றன. அதுவே ஒவ்வொரு நபரையும் தனித்துவமாக்குகிறது" என்றார்.

20 year old Miss England finalist competing without makeup

இறுதிப்போட்டி

இந்நிலையில், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் மிஸ் இங்கிலாந்து இறுதி போட்டியிலும் ஒப்பனை இல்லாமலேயே போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"அதிர்ச்சிகரமான ஆனால் அற்புதமான அனுபவம். இளம் வயதிலேயே மேக்கப் போட ஆரம்பித்தாலும், போட்டிக்கான பாரம்பரியத்தைத் தவிர்க்க முடிவு செய்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

20 year old Miss England finalist competing without makeup

இந்நிலையில், மெலிசாவின் இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்ததுடன், அவர் இறுதிப்போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

Also Read | "வெயிட் பண்ணுங்க.. ஒரு ஆள் உள்ள இருக்காரு".. இரட்டை கோபுர தகர்ப்பின் இறுதிக்கட்டத்தில் ஒலித்த அலாரம்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!

MISS ENGLAND, MISS ENGLAND FINALIST COMPETING, WITHOUT MAKEUP

மற்ற செய்திகள்