ஒரே இடத்தில் கூடிய 178 பேர்.. எல்லாரோட பெயர்ல இருந்த Common விஷயம்.. "கின்னஸ் சாதனையே படைச்சுடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரே இடத்தில் சுமார் 178 பேர் கூடி இருந்ததுடன் உலக சாதனை படைத்துள்ள விஷயம், உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.

ஒரே இடத்தில் கூடிய 178 பேர்.. எல்லாரோட பெயர்ல இருந்த Common விஷயம்.. "கின்னஸ் சாதனையே படைச்சுடுச்சு"

பொதுவாக, ஒரு பார்ட்டி அல்லது ஏதேனும் கூடும் விழாக்களில் அங்கே வரும் நபர்களில் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமான காரியமாக தான் இருக்கும். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் குழப்பம் தான் உருவாகும்.

அப்படி ஒரு சூழலில், ஒரே இடத்தில் கூடிய 178 நபர்களின் பெயரில் உள்ள ஒற்றுமை தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. Hirokazu Tanaka என்ற பெயருடைய மொத்தம் 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளனர். ஜப்பானில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில்,வியட்நாம் மற்றும் Hanoi உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் Hirokazu Tanaka என்ற பெயர் உடைய நபர்கள், ஜப்பானில் கூடி உள்ளனர். இதில், 80 வயது முதியவர் முதல் 3 வயது குழந்தை வரை என வயது வரம்பின்றி பலரும் கலந்துள்ளனர்.

The Tanaka Hirokazu என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர். இதற்கு முன்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு Martha Stewarts என்ற பெயருடைய 164 நபர்கள் Martha என்ற பெயருடைய டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூடி இருந்தது தான் சாதனையாக இருந்தது. அதனை தற்போது Hirokazu Tanaka என்ற பெயருடன் கூடிய 178 பேர் முறியடித்துள்ளனர்.

அரங்கம் ஒன்றில் தங்கள் பெயர் பொறிக்கப்பட்ட ஒரே மாதிரி டி ஷார்ட்களை அணிந்தபடி ஐந்து நிமிடம் இருந்த நிலையில், ஒரே பெயருடன் 178 பேர் இருந்ததாக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில்  Hirokazu Tanaka என்ற பெயர் கொண்ட 178 நபர்கள் ஒரே இடத்தில் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

GUINNESS RECORD, HIROKAZU TANAKA

மற்ற செய்திகள்