‘லேண்ட் ரோவரை துரத்தி வந்த 17 அடிநீள #மலைப் பாம்பு’... #வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சொகுசு காரை துரத்திச் சென்று ஏற முயன்ற மலைப்பாம்பின் வீடியோ வெளியாகி காண்போரை உதறல் எடுக்க வைத்துள்ளது.

‘லேண்ட் ரோவரை துரத்தி வந்த 17 அடிநீள #மலைப் பாம்பு’... #வீடியோ!

தென் ஆப்பிரிக்காவின் பிரபல கடற்கரை நகரமான டர்பனுக்கு  சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர், அங்குள்ள கடற்கரையில் படகு சவாரி செய்வதற்காக, தங்களது சொகுசு கார்களில் படகினை பின் பக்கம் இணைத்து வந்துகொண்டிருந்தனர்.

கடற்கரை மணல் மற்றும் காடுகள் நிறைந்த அந்தப் பகுதியில், தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர். அப்போது 17 அடி நீள மலைப்பாம்பு ஒன்று, படகும், பின் பக்க டயரும் இணைந்த இடத்தில் வந்து நின்று கொண்டது. இதையடுத்து அந்த மலைப்பாம்பினை காரில் இருந்து இறங்கி, ஒருவர் விரட்ட முயன்றார். ஆனால் அந்தப் பாம்பு, பின்னால் நின்றிருந்த லேண்ட் ரோவர் காரின் மீது ஏற முயன்றது.

இதனைக் கண்ட அந்த காரின் ஓட்டுநர், உடனடியாக தனது காரை பின்னோக்கி இயக்கினார். ஆனாலும் அந்த மலைப்பாம்பு காரினை விரட்டிச் சென்றது. தொடர்ந்து காரை இயக்கியதால், ஒரு கட்டத்தில் அந்த மலைப்பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SNAKE, PYTHON, CAR, LANDROVER