'அறைக்கு வெளியே நின்ற 30 ஆண்கள்'... 'இளம்பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த நடுங்கவைக்கும் சம்பவம்'... 'நாட்டையே உலுக்கியுள்ள பயங்கரம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேலில் இளம்பெண் ஒருவரை ஹோட்டல் அறையில் வைத்து 30 ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் விடுமுறையை கழிக்க சென்ற 16 வயது இளம்பெண் ஒருவர் ஈலத் நகரிலுள்ள ஹோட்டல் அறையில் வைத்து 30 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரத்திலும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக பலரையும் கைது செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
சிசிடிவி கேமரா பதிவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அறைக்கு வெளியே ஆண்கள் கூட்டம் வரிசையாக நின்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் நேரடி சாட்சியம் அளிக்காத சூழலில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர், பாதிக்கப்பட்ட பெண்ணே தங்களை அழைத்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இது அதிர்ச்சியளிக்கிறது. வேறு வார்த்தைகளே இல்லை. இது சிறுமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இதற்கு காரணமானவர்கள் நீதிக்கு முன்பு கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த இளம்பெண்ணுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண் தற்போது தனது குடும்பத்தினருடன் உள்ளதாகவும், மக்களின் ஆதரவால் அவர் ஊக்கத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்