‘ஒரு நாள் பிரதமர்’ ஆன 16-வது சிறுமி.. உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்..! எந்த ‘நாடு’ தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியை பதவி வகித்த சம்பவம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

‘ஒரு நாள் பிரதமர்’ ஆன 16-வது சிறுமி.. உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்..! எந்த ‘நாடு’ தெரியுமா..?

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் 34 வயதான சன்ன மரின் (Sanna Marin) என்ற பெண் தலைவர் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு ஆண்-பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் 16 வயது சிறுமி ஆவா முர்டோ (Aava Murto) என்பவரை நேற்று முன்தினம்  ‘ஒரு நாள் பிரதமர்’ ஆக்கி அழகு பார்த்துள்ளார்.

16-year-old girl becomes prime minister for a day in Finland

ஆனால் ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் வரும் 11ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்தார்.

16-year-old girl becomes prime minister for a day in Finland

பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு, ‘பெண் குழந்தைகளுக்கு அதிகாரம்’ என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்