'முடியாது.. மாட்டேன்!'... கொரோனா பரிசோதனைக்கு ‘நோ’ சொல்லி அடம் பிடிக்கும் இளம் செவிலியர்!.. அழுதுகொண்டே வெளியிட்ட காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவமனையில் பணியாற்றும் இளம் செவிலியர் ஒருவர், மருத்துவமனை நிர்வாகம் நடத்தவுள்ள கொரோனா டெஸ்ட் முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொள்ளப் போவதில்லை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் நர்ஸிங் மாணவியாக இருந்து, மருத்துவமனை பணியில் கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் மூலமாக பணியில் சேர்ந்திருக்கும் Erin Hathaway என்பவர் தான், கிறிஸ்துமஸ்க்கு முன்பாக டிசம்பர் 15-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் இந்த சோதனையில் தான் கலந்து கொண்டு சோதனை செய்துகொள்ளப் போவதிலை என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து 12 மணி நேரங்கள் சம்பளமில்லாமல் தன்னைப் போன்றவர்கள் பணிபுரிவதாகவும், தங்களை வைத்து அனைத்து வேலைகளையும் வாங்கிக் கொள்ளும் மருத்துவ நிர்வாகம் தங்களுக்கு ‘அத்தியாவசிய பணியாளர்கள்’ என பெயர் வைத்திருப்பதாகவும், ஆனால் அத்தியாவசியப் பணியாளர்களின் அத்தியாவசிய பணிகளுக்கு தகுந்த ஊதியம் கொடுப்பதில்லை என்பதுடன், தொடர்ந்து 12 மணிநேரமாக சம்பளமில்லாமல் தங்களை வேலை வாங்குவதாக அழுதுகொண்டே பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கிறிஸ்துமஸ்க்கு முன்பாக இந்த சோதனையை எடுத்துக்கொண்டால், தன்னால் கிறிஸ்துமஸைக் கொண்டாட வீட்டுக்குச் செல்ல முடியாது என்றும், தன் வீட்டாரைப் பார்த்து வெகு நாட்கள் ஆனதாகவும், அவர்களை இம்முறை பார்த்தே ஆக வேண்டும் என்றும், டிசம்பர் 18-ஆம் தேதி தனக்குத் தானே சுயமாக கொரோனா சோதனை செய்துகொள்வதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தின் மூலமாக பரிசோதனை செய்துகொண்டால், வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பல்கலைக் கழக மருத்துவமனை நிர்வாகம், Erin Hathaway-ஐ தொடர்பு கொண்டு இது குறித்து பேசி புரியவைக்க முயற்சித்து வருவதாகவும், கொரோனா டெஸ்ட் அவசியம் என்றும் தம் தரப்பில் குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்