11 நாள் 'சிரிக்கவும்' கூடாது, 'அழவும்' கூடாது...! 'மீறினா ஜெயில்ல பிடிச்சு போட்ருவோம்...' 'வடகொரியா கொண்டுவந்துள்ள அரசாணை...' - என்ன காரணம்...?
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவில் மக்கள் அழுவதற்கும், சிரிப்பதற்கும் 11 நாட்கள் தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளார் வடகொரியா அதிபர் கிம்.
இந்த உலகத்திலேயே ஒரு நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் தங்களுக்கு என தனி ஒரு உலகம் என வாழ்ந்து வருவது வடகொரிய நாடு. இங்கு நடக்கும் அனைத்து விவகாரங்களும் ஏனைய உலக நாடுகளால் உற்றுநோக்கப்படும்.
நாம் இப்போது 21-11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் இன்றளவும் வடகொரியாவில் இருக்கும் மக்கள் 20ஆம் நூற்றாண்டில் கூட காலெடுத்து வைக்காத அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடையாமல் உள்ளனர். உலக நாடுகள் ஒரு கால அட்டவணையை பயன்படுத்தினால் வடகொரியா வேறொரு ஆண்டை கொண்டாடி வருகிறது.
வடகொரிய அரசு இதுவரை அறிவித்துள்ள அனைத்து வருட பட்ஜெட்களிலும் நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நிதி ஒதுக்குவதை விட ராணுவத்திற்கே மூன்று பங்கு நிதியை ஒதுக்கும். அதோடு வடகொரியாவின் சினிமா பார்க்க தடை, பாட்டு கேட்க தடை, ப்ளூ ஜீன்ஸ் தடை என பல விசித்திர தடைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மக்கள் 11 நாட்கள் சிரிக்கவும், அழுகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே வடகொரிய மக்கள் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கவும், அந்த நாட்களில் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம்போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்