அதிகரிக்கும் 'கொரோனா' பாதிப்பு... '103 வயசுல' என்னால முடிஞ்ச 'உதவி'... உலககத்தையே திரும்பி பார்க்க வைத்த 'அசத்தல்' தாத்தா!
முகப்பு > செய்திகள் > உலகம்பெல்ஜியத்தில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் குழுவுக்கு நிதி திரட்ட வேண்டி 103 வயது மருத்துவர் ஒருவர் மாரத்தான் ஓடி கொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று மூலம் இதுவரை உலகளவில் சுமார் 75 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் மூலம் அனைத்து உலக நாடுகளும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது தான் ஒரே தீர்வு என்பதால் பல நாடுகளிலுள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 103 மருத்துவர் ஒருவர், கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவ குழு ஒன்றிற்கு நிதி திரட்ட வேண்டி மாரத்தான் சென்று கொண்டிருக்கிறார். அல்போன்ஸ் லீம்போயல்ஸ் என்ற அந்த மருத்துவர், தனது வீட்டின் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மரத்தானில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தனது மாரத்தான் பயணத்தை தொடங்கிய அவர், ஜூன் 30 ம் தேதி முடிக்க திட்டமிட்டுள்ளார். அவர் இதுவரை 6,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 5,16,600 ரூபாய்) சேகரித்துள்ளார். இரண்டாம் உலக போரின் போது 100 வயது நபரான டாம் முரே என்பவர், மரத்தானில் ஈடுபட்டு நிதி திரட்டியதை போல தானும் மக்களுக்காக நிதி திரட்டுவது போல தானும் திரட்டுவதாக அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்