“WORK FROM HOME நீட்டிப்பு!.. கூடவே இப்படி ஒரு ஜாக்பாட்!”.. அள்ளிக் கொடுக்கும் முன்னணி நிறுவனம்.. அந்த அதிரடி அறிவிப்பு என்ன தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ், பெரும் நிறுவனங்களை பாதித்ததை அடுத்து, முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் சூழல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிற தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, பேஸ்புக் நிறுவனமும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும் வேலை முறையை 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளது.
இதுபற்றி பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “சுகாதாரம் மற்றும் அரசாங்க நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில், 2021 ஜூலை வரை பேஸ்புக் ஊழியர்களை, அவர்கள் விரும்பினால் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கிறோம், கூடுதலாக இதெற்கென கூடுதலாக $ 1,000 (ஆயிரம் டாலர்) ஊழியர்களுக்கு வழங்குகிறோம்” என்று கூறினார்.
முன்னதாக ட்விட்டர் நிறுவனம் தமது ஊழியர்கள் விருப்பப் பட்டால் காலவரையற்ற முறையில் வீட்டில் இருந்து பணிபுரிவதை தொடரலாம் என்று அனுமதி வழங்கியது. இதேபோல் ஆல்பாபெட் நிறுவனம் தமது ஊழியர்களை 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது.
மற்ற செய்திகள்