"ப்பா.. என்ன இது இப்டி இருக்கு?!.." வாயை பிளந்த மீனவர்கள்.. "100 வருஷத்துக்கு மேல வாழ்ந்துட்டு இருக்காம்.."
முகப்பு > செய்திகள் > உலகம்இணையத்தில் அடிக்கடி கடலில் இருந்து சற்று வித்தியாசமான அல்லது மிக மிக அரிய வகை மீன்கள் உள்ளிட்டவை சிக்குவது தொடர்பான செய்திகளையும், வீடியோ மற்றும் புகைப்படங்களையும் நாம் நிறைய பார்த்திருப்போம்.
அந்த வகையில், கனடாவில் ஒரு உயிரினம் சிக்கியுள்ளது தொடர்பான செய்தி, தற்போது நெட்டிசன்கள் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
ராட்சச வகை மீன்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சேர்ந்த மீனவர்களான ஸ்டீவ் இக்லாந்து மற்றும் மார்க் போய்ஸ் ஆகியோர், மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தான், ஒரு ராட்சச மீனை அவர்கள் கண்டு வியந்து போயுள்ளனர். வெள்ளை ஸ்டர்ஜன் எனப்படும் இந்த ராட்சச மீனானது, சுமார் 10 அடி நீளம் உள்ளதாகும். அதே போல, நூறு வயது வரை ஆன இந்த மீன், 57 அடி அகலமும் 317 கிலோ வரை எடை வரை கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வெள்ளை ஸ்டர்ஜன் மீனை நீரில் இருந்து, அவர்கள் பிடித்து வெளியே கொண்டு வர, சுமார் இரண்டு மணி நேரங்கள் வரை ஆனதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனைப் பிடிக்கும் போது, அது நீரிலேயே பலமுறை துள்ளிக் குதித்த போது தான், எந்த அளவுக்கு அது பெரிதாக உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
150 வயசு வரை வாழுமாம்..
தொடர்ந்து இந்த ராட்சச மீனான வெள்ளை ஸ்டர்ஜனை அந்த மீனவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் நீரிலேயே விட்டுள்ளனர். இந்த மீன் குறித்து தெரிய வந்த மற்ற சில தகவல்களின் படி, வட அமெரிக்காவில் உள்ள Fresh Water மீன்களில் மிகவும் பெரிதானது இந்த வெள்ளை ஸ்டர்ஜன் மீன் என்றும் கூறப்படுகிறது. சுமார் 14 அடி நீளமும், 650 கிலோ வரையும் வளரக்கூடிய இந்த மீன், 150 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியதாகும்.
இந்த வெள்ளை ஸ்டர்ஜன் மீனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read | பல வருஷ காதல்.. திருமணத்திற்கு முன் காதலி செய்த விஷயம்.. மனம் பொறுக்காமல் இளைஞர் எடுத்த முடிவு
மற்ற செய்திகள்