'நாளிதழ்' முழுவதும் 'உயிரிழந்தவர்கள்' படங்கள்... 'இத்தாலியில் என்னதான் நடக்கிறது...' 'உலகப்போரை விட மோசமான உயிரிழப்பு...' சமூக வலைதளங்களில் 'வைரலான' 'புகைப்படம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலி நாட்டில், நாளிதழ் ஒன்றில், கடந்த 13ம் தேதி வெளியான பதிப்பில், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் மரண அறிவிப்பு மட்டும் 10 பக்கத்துக்கு வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில் வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை தாண்டி சென்று விட்டது. நேற்று முன்தினம் மட்டும், 1,441 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 1,809ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 24 ஆயிரத்து, 747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பெர்காமா என்ற நகரிலிருந்து வெளியாகும் 'லிகோ டி பெர்காமா' என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த பிப்uவரி 9ம் தேதி இந்நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு அரை பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு மட்டுமே இருந்துள்ளது.
இதனை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டள்ளார். இந்தபுகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது. உலக மக்கள் இத்தாலிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.