‘இனி ஈஸியா சார்ஜ் பண்லாம்!’... இது நம்ம List-லயே இல்லயே?.. டிஜிட்டல் சந்தையில் ‘ஜியோமி அறிமுகப் படுத்திய’ வாயைப் பிளக்க வைக்கும் தொழில்நுட்பம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

செல்லுலார் மொபைல் போன் வடிவமைத்த மார்ட்டின் கூப்பருக்கே ஆச்சரியம் கொடுக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.

‘இனி ஈஸியா சார்ஜ் பண்லாம்!’... இது நம்ம List-லயே இல்லயே?.. டிஜிட்டல் சந்தையில் ‘ஜியோமி அறிமுகப் படுத்திய’ வாயைப் பிளக்க வைக்கும் தொழில்நுட்பம்!

டிஜிட்டல் சாதனங்களை வடிவமைத்து உலகின் முன்னணி நிறுவனங்களில் நம்பத்தகுந்த நிறுவனமாக இடம் பிடித்திருக்கும் ஜியோமியின் புதிய முயற்சி பலராலும் பாராட்டப் பெற்ற வருகிறது. ஜியோமி MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர் மூலம் இது டிஜிட்டல் டிவைஸ்களை காற்றிலேயே சார்ஜ் செய்துகொள்ளக் கூடிய அருமையான வசதி அறிமுகம் ஆகியிருக்கிறது. இதன் மூலம் Wire பயன்படுத்த தேவையில்லை. ஆனால் அதே சமயம் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும். இந்த தகவலை ஜியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த தகவல் வைரலாகி வருகிறது.

பல நாட்களாகவே ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்த டிஜிட்டல் சாதனங்களை வடிவமைப்பது பற்றி பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக பேசி வந்தன. எனினும் வணிக ரீதியாக எந்த ஒரு நிறுவனமும் இதனை வெற்றிகரமாக சந்தையில் அறிமுகப்படுத்தியதாகத் தெரியவில்லை. இதனிடையே வயர்லெஸ் சார்ஜிங் வசதியை டெக் டெமோ என்கிற நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. எனினும் அந்த சாதனம் பரவலாக அறியப்படாத சூழ்நிலையில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வருபவர்களின் எதிர்ப்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை திருப்தி செய்ய பல நிறுவனங்கள் முயன்று வந்தன.

டெக் டெமோ அறிமுகப்படுத்திய 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி பரவலாக பேசப்பட்டது என்றாலும் அதையும் தாண்டி தற்போது இன்னொரு புதிய புரட்சியை ஜியோமி அறிமுகப்படுத்தி இருக்கிறது . டெக் டெமோ முன்னேறிய ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினால் தான் அது புரட்சியாக இருக்கும் என்று ஜியோ செய்தி தொடர்பாளர் இதுபற்றி கூறும்போது தெரிவித்திருக்கிறார்.

ALSO READ: 'கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக'.. ஹோட்டல் ஊழியர்களாக மாறி ‘கோடீஸ்வர கணவரும் நடிகையும்’.. செய்த மோசடி அம்பலம்! அடுத்த நடந்த ‘அதிரவைக்கும் சம்பவம்!’

அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்த கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் என்று சொல்லப்படும் நிலையில் வெற்றிகரமாக ஜியோமி இதனை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. இது பரவலாக பேசப்பட தொடங்கியுள்ளது.

மற்ற செய்திகள்