'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

இன்றைய தேதியில் நாம் கூகுளில் என்ன தேடுகிறோமோ அதுதான், நாம் ஹேக்கர்களுக்கு கொடுக்குற ஹிண்ட் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆம், அதைப் பார்த்துதான் நம் தேவை என்ன? அதற்குத் தகுந்த மாதிரி நம்ம கிட்ட பேசி கட்டய போட்டு திருட நினைக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் உண்டு.

'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!

அப்படி இருக்க, நாமாகவே சென்று ஹேக்கர்களிடம் சிக்குவதெல்லாம் ஒரு  ‘லெஜண்டரித் தனம்’ இல்லையா? அப்படி ஒரு சம்பவம்தான் பெங்களூரில் அரங்கேறியுள்ளது. அப்படித்தான் பெங்களூரில் ஒரு பெண், ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் பண்ணிட்டு, பிறகு கேன்சல் செய்திருக்கிறார். ஆனாலும் செலுத்திய பணம் திரும்பவும் அக்கவுண்ட்டிற்கு வராததால், கஸ்டமர் கேருக்கு போன் செய்து கேட்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.

ஆனால், அதில் கஸ்டமர் கேர் நம்பர் இல்லாததால், பொத்தாம் பொதுவாக கூகுளில் தேடி ஒரு நம்பரை தேடியுள்ளார். அதன் பின்னர் அந்த நம்பருக்கு போன் செய்து பேசியுள்ளார். எதிர்முனையில் இருந்த ஹேக்கரும் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் போலவே பேசி வங்கி விபரங்களை கறந்திருக்கிறார்.

அதன் பின்னர், அந்த பெண் கஸ்டமருக்கு சிரமம் வைக்காமல், அவரது வங்கியில் இருந்த அனைத்து பணத்தையும் துடைத்தெடுத்திருக்கிறார். அதன் பின்னரே, இப்படி நாமாக கூகுளில் தேடி ஒரு நம்பரின், ஒரு நபரின் உண்மைத் தன்மை அறியாமல் பேசக் கூடாது என்கிற முடிவுக்கு அந்த பெண் வந்துள்ளார். இது பலருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அவரே வெளியில் தெரிவித்துள்ளார்.

GOOGLE, ONLINE, HACKING