கட்டண 'உயர்வு' போட்டியில்.. 'ஜியோ'வும் இறங்கலாம்.. 30-40% உயர்த்த திட்டம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஜியோ வருகையால் ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் 2-வது காலாண்டில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக 74 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனால் தங்களது கட்டணத்தை உயர்த்த போவதாக இரண்டு நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.
வருகின்ற டிசம்பர் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதுகுறித்த விவரங்களை விரைவில் இரண்டு நிறுவனங்களும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஜியோவும் தன்னுடைய கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற நிறுவனங்கள் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துகின்றன என்பதை பார்த்து பின்னர் அதற்கு ஏற்றாற்போல ஜியோ கட்டணங்களை உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்குப்பின் பொறுமையாக சந்தை நிலவரங்களை ஆராய்ந்து கட்டணத்தை உயர்த்தும் என கூறப்படுகிறது.
கட்டண உயர்வு அறிவிக்குப்பின் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நஷ்டத்தினை சமாளிக்கும் வகையில் சுமார் 30-40% வரை கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.