வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து வரவுள்ள ‘3 அசத்தலான வசதிகள்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வாட்ஸ்அப் செயலியில் அடுத்தடுத்து பல அசத்தல் அப்டேட்டுகள் வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து வரவுள்ள ‘3 அசத்தலான வசதிகள்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..

உலக அளவில் பிரபல செயலியாக உள்ள வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்காக தொடர்ந்து பல்வேறு வசதிகளைக் கொடுத்து வருகிறது. பீட்டா வெர்சனைத் தொடர்ந்து சமீபத்தில்தான் கைவிரல் ரேகை மூலம் லாக் செய்யும் வசதி, குரூப் பிரைவஸி ஆகிய வசதிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதையடுத்து டார்க் மோட் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஃபோன்களுக்கு விரைவில் வரவுள்ள நிலையில் அதற்கு அடுத்ததாக 3 புதிய அப்டேட்டுகள் வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்நாப்சேட் செயலில் உள்ள சிறப்பு அம்சமான Self-Destructing Messeges எனும் அப்டேட்டை வாட்ஸ்அப்பும் தற்போது கொண்டு வர உள்ளது. அதன்மூலம் பயனாளர்கள் தங்களுடைய மெசேஜ்கள் தானாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு டெலிட் ஆகும்படி செய்துகொள்ள முடியும். டெலிட் மெசேஜ் ஆப்ஷனின் கீழ் இந்த புதிய அப்டேட் வரவுள்ளது.

இரண்டாவதாக ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்கும் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஃபோன் பயனாளர்களுக்கு வரவுள்ளது. மூன்றாவது அப்டேட்டான Hide Muted Status மூலமாக ஒரு குறிப்பிட்ட நபரின் மியூட் செய்த ஸ்டேட்டஸை முழுமையாக மறைக்க முடியும்.  இது தற்போதுள்ள  Mute Status ஆப்ஷனின் அப்டேடட் வெர்ஷனாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.