‘வாட்ஸ்அப்பில்’ புதிதாக வரவுள்ள ஆப்பிளின் ‘ஃபன் ஃபீட்சர்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டில் மேமோஜி ஸ்டிக்கர் என்ற அம்சம் அறிமுகமாக உள்ளது.
உலகம் முழுவதும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக உள்ள வாட்ஸ்அப் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது ஆப்பிளில் உள்ள மெமோஜி ஸ்டிக்கர் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
எமோஜிகளைப் போலவே மெமோஜி அல்லது அனிமோஜிகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி பயனாளர்களைக் கவர்ந்ததுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதுவரை ஐஃபோன் உபயயோகிப்பவர்கள் ஐமெசேஜில் மட்டுமே இதை உபயோகிக்கும் வசதி இருந்து வருகிறது. இந்நிலையில் மெமோஜி பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் தற்போது ஐஃபோன்களில் வாட்ஸ்அப் செயலியிலும் மெமோஜி ஸ்டிக்கரைப் பயன்படுத்தும் வசதி வரவுள்ளது.
APPLE, IPHONE, WHATSAPP, EMOJI, MEMOJI, ANIMOJI