‘2020 முதல் பழைய போன்களில் வாட்ஸ் அப் இயங்காது’!.. உங்க போன் இருக்கானு சீக்கிரம் 'செக்' பண்ணிக்கோங்க..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வரும் 2020-ம் ஆண்டில் இருந்து பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதில், iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதற்கு முந்தைய ஆண்டிராய்டு மென்பொருளில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகையான போன்களை வைத்திருப்பவர்கள், புதிய வாட்ஸ் அப் கணக்கை துவங்கவோ அல்லது பழைய கணக்கை புதுப்பிக்கவோ முடியாத வகையில் தொழிநுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.