“பிப்.1 முதல்.. இந்த மாடல் ஆண்ராய்டு, ஐ-போன், விண்டோஸ் போன்களில்.. ”வாட்ஸ் ஆப் இயங்காது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!“.. “லிஸ்ட்ல உங்க போன் இருக்கா?“
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், சில குறிப்பிட்ட மாடல் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளும் நாளும் வாட்ஸ்-ஆப் செயலியின் சேவையும் சிறப்பம்சங்களும் மேம்படுத்தப்படும் விதமாக பழைய மாடல் போன்களில் வாட்ஸ் ஆப் தன் சேவையை நிறுத்தி உள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலும் வீடியோக்கள், புகைப்படங்கள், தகவல் பரிமாற்றங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகிர்வதற்கும், பார்ப்பதற்கும் வாட்ஸ் ஆப் என்கிற செயலி முக்கியமான, தவிர்க்க முடியாத செயலியாக இருக்கும் பட்சத்தில் தற்போது வாட்ஸ் ஆப் மூலமாக வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்டவையும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்படி நாளுக்கு நாள் வாட்ஸ் ஆப் செயலின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு போகும் நிலையில் அதனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அதிரடியாக இறங்கியுள்ளது. முன்னதாக வாட்ஸ் ஆப் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை நேரடியாக அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், சில குறிப்பிட்ட மாடல் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று தெரிவித்துள்ளது .
அதாவது ஆன்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் உள்ள மாடல் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐபோன்களில் iOS8 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்றும், தவிர விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.