வாட்ஸ் அப்பில் வந்தாச்சு செம அப்டேட்.. "இனி Chatting சும்மா பட்டையை கெளப்பும்.."
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பொதுவாக நாம் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலிகள், அடுத்தடுத்து அப்டேட்களை அறிவித்துக் கொண்டே இருக்கும்.
பல புதிய வசதிகளை பயனர்களுக்கு கொடுக்கும் வகையில் இந்த அப்டேட்கள் அமைந்திருக்கும்.
அதிலும் குறிப்பாக, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல செயலிகளில் என்னென்ன அம்சங்கள் வர போகிறது என்பதை அறிந்து கொள்ளவே வாடிக்கையாளர்கள் ஆவலாக இருப்பார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், வாட்ஸ் அப்பில் வர போகும் புதிய அப்டேட் பற்றி அசத்தலான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் தான், வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது.
புதிய அப்டேட்
இந்த செயலியில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக வாட்ஸ் அப் செயலியில் எதிர்பார்க்கப்பட்டு வந்த எமோஜி அப்டேட், இன்று முதல் அறிமுகமாகும் என பேஸ்புக் நிறுவனர் மார்க் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏமோஜி ரியாக்ஷன்கள்
முன்னதாக, ஆரம்பத்தில் பேஸ்புக் செயலியில் லைக் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. இதன் பின்னர் தான், அதன் அப்டேட்டில் எமோஜி ரியாக்ஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. லைக், சோகம், சிரிப்பு என மொத்தம் 6 ரியாக்ஷன்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதே போல, தற்போது வாட்ஸ் அப்பிலும் எமோஜி ரியாக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது Android 2.22.8.3.பீட்டா வெர்ஷனில் அறிமுகம் ஆனது. பீட்டா பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், தற்போது அனைவருக்கும் அறிமுகமாகி உள்ளதாக மார்க் குறிப்பிட்டுள்ளார். புதிதாக வாட்ஸ் அப்பினை அப்டேட் செய்யும் போது, இந்த ஆப்ஷன் கிடைக்கும் என கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும், விரைவில் இந்த அப்டேட் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. லைக், லவ், சர்ப்ரைஸ், சிரிப்பு மற்றும் தேங்க்ஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாட்ஸ் அப் சாட் செய்யும் அனுபவம், இன்னும் அதிக சுவாரஸ்யத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்