‘இனி இது எல்லாம் கட்டாயம் கிடையாது’!.. வாட்ஸ் அப் நிறுவனம் சொன்ன குட் நியூஸ்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இந்தியாவில் புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் கொண்டு வந்த தனியுரிமை கொள்கை சட்டம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வாட்ஸ் அப் தங்களது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. மேலும் தனியுரிமை கொள்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வாட்ஸ் அப் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ‘வாட்ஸ் அப் தனது புதிய கொள்களைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது’ என தெரிவித்துள்ளார். மேலும் புதிய கொள்கைகளுக்கு அனுமதி வழங்காத பயனர்களின் வாட்ஸ் அப் செயலி எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டம் ஆகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்